Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க‌

மேனி எழிலை பாதுகாக்க ரசாய னப் பொருட்கள் கலந்த அழகு சா தனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன் படுத்தி சருமத்தினையும், அழகை யும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழ கை பாதுகாப்பதோடு சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

பீட்ரூட் சாறு

பீட்ரூட் அரைத்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் காய வைக் கவும். பின்னர் தண்ணீ­ரால் கழுவி துடைத் தால் முகம் பொலி வு பெறும்.கொதிக்க வைத்த கேரட் சாறினை குளிரவைத்து பின்னர் முகத்திலும், உடம்பிலும் தேய்த் துக் குளிக்க, முகமும், தேகமும் பள பள ப்பா கும்.

பசும்பால் குளியல்

கோடை காலத்தில் சருமம் உலர் ந்து விடும். இதனை தவிர்க்கவும் பள பள ப்புடன் திகழவும், தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழு க்க தேய்த்து விட்டு பின்பு குளிக்க லாம். ( கிளியோ பாட்ரா கழுதைப் பாலில் குளித்தா ராம்). பாலில் எலு மிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேக மும் பளிச்சிடும்.

வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரி ல் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப் பது சரும த்திற்கு பாதுபாப்பு.

சந்தனம் ஆலிவ் எண்ணெய்

ரசாயனக் கலவையும், கொழுப்பு அமில ங்களும் நிறைந்த சோப்பு தேய்த்து குளிப் பதை விட வீட்டி லேயே கிடைக்கும் மஞ் சள்தூளும், சந்தனத்தூளும் எடுத்து ஆலி வ் எண்ணையில் கலந்து உடம்பில் பூசி ஊற வைக்கவும். பின்னர் 10 நிமிடம் கழி த்து குளிக்க, முகமும், தேகமும் மினு மினுக்கும்.

மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க , உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச் சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கல ந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பள பளப்பாகும்.

புத்துணர்ச்சி கிடைக்க

வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக் காளி ச்சாறும் சம அளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங் காமல் மின்னிப் பிரகாசிக்கு ம்.

ரோஜா இதழ்களை கூழாக அரை த்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளி க்க உடம்பு புதுப்பொலிவு பெறும். தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்து ணர்ச்சி பெறும்.

சத்தான உணவுகள்

வெயில்காலத்தில் சோடியம் சத்துக்கு றைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழா மல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டை யும் தணித்து குளு மையும் தரும்.

கோடையில் சிலிகான் சத்து குறையும் போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிர ங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானிய ங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைக ளைச் சாப்பிட்டுவர வே ண் டும்.

பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைக ளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும். புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடை க்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக் கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திக ழும். தினந்தோறும் குறைந்தது 2 லிட் டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பரு குங்கள் சருமத்திற்கு நல்லது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: