Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எக்ஸாம் ஃபீவரா..?

தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது! வருடம் முழுக் கப் படித்ததை ஒரு நாளில், ஒரு தாளில் நிரூபிக்க வே ண்டிய பொறுப்பில் உழைத்துக் கொண்டி ருப்பார்கள் மாணவர்கள். அவர்களுக்கு நடுவே… ‘ஹைய்யோ… என்னால முடி யல…’ என்று தளர்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்! அவர்களுக்காவே, ‘முயன்றால் முடியும்!’ என்று தங்களின் அனுபவம் மூலமாக ‘எக்ஸாம் ஃபீவர்’ மருந்து கொடுக்க வருகிறார்கள், இந்த டாப் ஸ்கோரர் கல்லூரி மாணவிகள்.

டி.வி, மொபைல், சாட்டிங்… தியாகம்!
வித்யா லக்ஷ்மி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை

”ப்ளஸ் டூ-வில் 1,124 என்னோட மார்க். நான் செய்த சில தவறுக ளால் 15 மார்க் பற்றாக்குறை ஏற் பட்டு, மெடிக்கல் படிக்கறதுக்கான வாய்ப்பை இழந்தது, ஒரு பனிஷ்மெ ன்ட் பாடம் எனக்கு. ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் கேள்விகளைத் தேர்ந்தெ டுத்தப்போ, எல்லாக் கேள்விகளும் தெரியும்ங்கிற தைரியத்துல, சுலபமா ன கேள்விகளை விட்டுட்டு கஷ்டமா ன கேள்விகளா தேர்ந்தெடுத்துட்டே ன். அதில் நிறைய நேரம் செலவாயிடுச்சு. அதனால, கேள்விக ளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. அன்னிக்கு பாடத்தை அன் னிக்கே படிக்கறதுதான் பெஸ்ட். இருந்தாலும் எக்ஸாம் நெருங்க நெருங்க ‘இன்னும் இதெல்லாம் படிக்கலையே’னு பதறாம, ‘இப்போ இருந்தாச்சும் படிப்போம்’னு நம் பிக்கையா ஆரம்பிச்சா, நிச்சய மா முடியும். சயின்ஸ் பாடங்க ளை ரியல் லைஃபோட ரிலேட் செய்து படிச்சா, சுலபமா புரியும். மறந்தும் போகாது.

காலேஜ் போயிட்டா… படிக்க வேண்டாம்னு நம்ம பசங்களு க்கு ஒரு மோசமான மூட நம்பிக் கை இருக்கு. ஸ்கூல் போலவே தினமும் படிச்சதோட, செமஸ்டர் டைம்ல டி.வி, மொபைல், சாட்டி ங்னு எல்லாத்தையும் தியாகம் செஞ்சதாலதான் இப்போ என்னா ல 85% எடுத்து, கேம்பஸ் இன்டர் வியூல செலக்ட் ஆகவும் முடிஞ் சது. மொபைலும், ஃப்ரெண்ட்ஸு ம் எப்பவும் இருப்பாங்க. செம ஸ்டரை விட்டுட்டா, அரியர்ஸ் தான் இருக்கும்… ஜாக்கிரதை. கடைசியா ஒரு டிப்ஸ்… பரீட்சை க்குப் போறதுக்கு முன்னாடி, தயிர்ல சீனி போட்டு சாப்பிட்டுப் போ னா, எக்ஸாம் பயத்தினால உருவாகிற அசிடிட்டி குறையும்.”

ஒரு கை இல்லாமலே!
முத்துமாரி, சேது பொறியியல் கல்லூரி, விருதுநகர்

”நான் பிறந்த ஒரு வாரத்துல மருத்துவரோட கவனக்குறைவால் தவ றான ஊசி போட்டதால, என் வலது கையைப் பறிகொ டுத்துட்டேன். அதுக்காக முடங்கிடாம… ‘இடது கை தான் இருக்கே’னு சந்தோ ஷமா வாழப் பழகினேன். அப்பா பலசரக்குக் கடை வெச்சுருக்கார். தமிழ் மீடிய த்தில் படிச்சேன். டென்த்ல 477/500 வாங்கினேன்… ஸ்கூல் ஃபர்ஸ்ட்! ப்ளஸ் டூ-ல 1,046 வாங்கினேன். ‘அகரம்’ ஃபவுண்டேஷன் உதவியோட இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தேன்.

தமிழ் மீடியம் ஸ்டூடன்ட்ங்கிறதால ஆரம்பத்தில் ரொம்பவே தடுமா றினேன். டிக்ஷ்னரி வெச்சு ஒவ்வொரு வார்த்தையா அர்த்தம் தெரிஞ் சுக்கிட்டு படிப்பேன். பொதுவா தமிழ் மீடியம் ஸ்டூடன்ட்ஸுக்கு இங்கிலீஷ் ஸ்பெல்லிங்ல நிறைய மிஸ்டேக் வரும். அதனால படிச்சதை எல்லாம் நான் ஒருமுறை எழுதிப் பார்ப்பேன். அதுதான் தேர்வு நேரத்துல கை கொ டுத்துச்சு. ‘இவ்வளவு நேரம் படிச்சேன்’னு கணக்கு வை க்கிறதைவிட, என்ன படிச்சு ருக்கேங்கிறதுல தான் கவ னமா இருப்பேன். இப்போ என்னோட டிபார்ட்மென்ட் ல 86% மதிப் பெண்களோட மூணாவது இடத்தில் இரு க்கேன். என்னாலயே முடியு ம்னா, உங்களால் நிச்சயமா முடியும்தானே?!”

பத்து நிமிஷம்கூட பொக்கிஷம்!
கன்னி ஆர்த்தி, சேது பொறியியல் கல்லூரி, சோழவந்தான்

”நான், கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி. எங்கப்பா ஒரு விவசாயி. எங்க ஊர்ல அதிகபட்சம் பொண்ணுங்களை ப்ளஸ் டூ வரைக்கும் தான் படிக்க வைப்பாங்க. இன்ஜினீயரிங் கனவு எல்லாம் காணத் தெரியாத சூழ்நிலையில், நல்ல மார்க் வாங்கணுங்கிறதை மட்டு மே குறிக்கோளா வெச்சுப் படிச் சேன். 1,046 மார்க் எடுத்தேன். இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தப் போ, பொதுவா கிராமப்புற மாண விகள் கூச்சத்தோட ஒதுங்கி யே இருந்தாங்க. நான் எல் லார்கிட் டயும் சகஜமா பேசிப் பழகினேன். தமிழ் மீடியம்ல படிச்சுருந்ததால, மற்ற ஸ்டூட ன்ட்ஸைவிட அதிகமா உழை க்க வேண்டியிருந்தது. பரீட் சை நேரத்துல அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்கூட வேஸ்ட் பண்ண மாட் டேன். கஷ்டமான பாடங்களை முத லில் முடிச்சுட்டு, அப்புறம் தான் சுலபமான பாடங்களுக்கு வருவேன். இப்போ 81% மதிப்பெண் களோட கேம்பஸ் இன்டர்வியூக்காக காத்துக்கிட்டு இருக்கேன். பரீட்சை நேரம் நெருங்கிடுச்சு… அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்கூட பொக்கிஷம் ஃப்ரெண்ட்ஸ். பை!”

நேரம் இல்லைங்கறது… பொய்!
அஞ்சனா, சாஸ்த்ரா யுனிவர்சிட்டி, தஞ்சாவூர்

”கிளாஸ் ரூமில் குறைவாவும், கிரவுண்ட், ஸ்டேஜில் அதிகமாவும் அட்டென்டன்ஸ் கொடுக்கிற எக்ஸ்ட் ரா கரிக்குலர் ஸ்டூடன்ட்ஸும், பர்சன் டேஜில் கலக்கலாம்ங்கிறதுக்கு, நானு ம் உதாரணம். கர்னாடக சங்கீதம், கீ- போர்டு, வயலின், ஓவியம், நடனம், ஸ்போர்ட்ஸ்னு எல்லாமே என் ஏரியா. சென்னையில் ஸ்கூல் படிச்சப்போ, மன்த்லி டெர்ம் எக்ஸாம் சமயத்துல எல்லாம்… ஏதாவது ஒரு ஆர்ட் காம்படி ஷன், ஸ்போர்ட்ஸ்னு ஓடிட்டே இரு ப்பேன். இப்படி மிஸ்ஸாகற கிளாஸ், டெஸ்ட் எல்லாத்தையும் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் மூலமா சமன் செஞ்சுக்கு வேன். டெஸ்ட்ஸ் கொஸ்டீன் பேப்ப ரை   வாங்கி, வீட்டுல நானே டெஸ்ட் எழுதுவேன். அதனால தான் ப்ளஸ் டூ-ல என்னால 1,048 மார்க் வாங்க முடிஞ்சது.

சென்னை, வள்ளியம்மாள் காலேஜ்ல பி.சி.ஏ சேர்ந்தப்போவும் சரி, இப்போ இந்த சாஸ்த்ரா யுனிவர் சிட்டியில எம்.பி.ஏ பண்றப் போவும் சரி… நாசிக், சிம்லானு கர்னாடக சங்கீதப் போட்டிகள், திருவையாறு தியாகராஜா ஆராதனா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரோட நாத வைபவம்னு பிஸியா பாடி ட்டேதான் இருக்கேன். ஆனா லும், நைட் ஸ்டடி, வீக் எண்ட் ஸ்டடினு படிப்பை பேலன்ஸ் பண்ணிடுவேன். ‘நேரமே இல் லை’னு சொல்றது சுத்தப் பொய். நிறைய நேரம் இருக்கு… நாமதான் பிரிச்சு பிரிச்சு சரியா பயன்படுத்திக்கணும்!”

நன்றி:- அவள் விகடன்

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: