Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என்னை எல்லோரும் கமல் மகளாகத்தான் பார்க்கிறார்கள்” – நடிகை ஸ்ருதிஹாசன்

சினிமாவில் திருப்தியே வரக்கூடாது, அப்படி வந்தால் வாழ்க்கை யில் முன்னேற முடியாது என்று நடி கை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக மான ஸ்ருதி, இப்போது தமிழி ல் ‌தனுஷ் உடன் 3 படத்தில் நடித்துள் ளார். விரை வில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சினிமா அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதி கூறியுள்ளதாவது, நான் கமல் மகளாக இருந்ததால் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு ஈஸி யாக கிடைத்தது. ஆனால் அது நிரந்தரம் கிடையாது. சினிமா வில் நீடிக்க திறமை வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். மேலும் சினிமாவில் திருப்தியே வர க்கூடாது. அப்படி வந்துவிட்டால் முன்னேற முடியாது என்றார். மேலு ம் தன்னை எல்லோரும் கமல் மக ளாகத்தான் பார்க்கிறார்கள். அதை மாற்ற தொட ர்ந்து முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply