Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுத்த சாவேரி ராகத்தில், தாள மாலிகை கொடுத்த காவ்யா மோகன்குமார்

காவ்யா மோகன்குமாரின் நடன அரங்கேற்றம், ஒரு கல்யாண வை போகத்தைப் போல் நடந்தது. காவ்யாவின் பெற்றோர் மதி- மோகன்குமார். வரவேற்பு முத ல் மேடை அலங்காரம் வரை எங்கு பார்த்தா லும் கலைநயம் காண்போரைப் பிரமிக்க வைத் தது. காவ்

யா படிப்பது ஒன்ப தாம் வகுப்பு, நாட்டியபேரொளி பத்மினியின் சிஷ்யை, ஷீலா நாராயணனி டம், அமெரிக்கா வில் நடனம் முதலில் பயின்று, பிறகு இந்தி யாவில் சென்னைக்கு வந்த தும். சித்ராவிச்வே ச்வரனிடம் பயின்று, தற்பொழுது மானசி ஆர்ட்ஸ் அகடமியின் நிறுவனர் காயத்ரி சசிதரனி டம், பயின்று வரு கிறார். பலநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தன்னை மெருக்கே ற்றி வருகிறார்.

கணபதி வந்தனத்தை தொடர்ந்து, காவ்யாவின் தொண்டுள்ளத்திற்கு ஏற்ப முதலில் பூமாஞ்சலி பூமி தாய்க்கு அளித்தார். தன் கால்க ளால்

 ஏற்படும் சிரமத்தை பொறு த்தருளுமாறு இறைஞ்சும் வகை யில், சுத்த சாவேரி ராக த்தில் தாள மாலிகையால் கொடுத்தார். அடுத்து, அலாரிப்பு இதில் நடனக்கலை ஞரின் நடனப்பயிற்சி எத்த னை அளவு உள்ளது, என்பது பார்ப்பவ ர்களுக்கு புரிந்து விடும். உடலும், மனமும் நடனத்தோடு இணைந்து உடலின் அங்க அசைவுகளை, நடனத்தின் முக்கிய கோட்பாடான அரைமண்டியில் உட்கார் ந்து ஆடி. தனது நடனத்தை நிலைநிறுத்தி குருவி ற்கும் பெருமை சேர்த்தார். அடுத்து பாரதியின் பாட லான “பாருக்குள்ளே நல்ல நாடு’ இதை தேஷ் ராக த்தில் அமைத்து சிறப்பித்தார்.

கே.என். தண்டாயுதபாணி பிள்ளையின் அற்புதமான ஆபோஹிராக “அன்னையை மறவேனடி’ என்ற வர்ணம். குழந்தையை வித வித அலங்காரங்கள், ஆபரணங்கள்சூட்டி அழகுபார்க்கும் காட்சிகளை, சிறப்பாக அபிநயங்கள் ஆயிரத்தெட்டு நீதிக்கதை கள் சொல்லி அதோடுதான் பெரியவளாக அக்குழந் தை வளரும் போது, திருக் குறளை கற்பித்து, பெரியவர்களை மதித்து பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, நெக்குருக நமக்கு ஆடிகொடுத்த விதம் மனதை தொட்டது, 14 வயது சிறுமி, தாய்மையின் குணம் தெரிந்து ஆடுவது மிகப்பெரிய விஷயம்.

அடுத்ததாக, காரைக்குடி மணி அவர்களின் லயக்கவிதை “தாத் தொம்ரம்’ என்ற லயபாடத்தின் முதல் அரிச்சுவட்டை கவிதையாக் கி, சிறப்பாக அளித்தார். அதற்கு, சசிதரனின் பாடலும் பாங்குடன் அமைந்தது. பாலமுரளியின் கதனகுதூகலராக தில்லானாவுடன் தன் நடன நிகழ்ச்சியை முடித்தார் காவ்யா. பேராசிரியர் நடனகுரு சுதாராணி ரகுபதி கலந்துகொண்டு, காவ்யாவை பாராட்டினார். கானக்குயில் திருமதி வாணி ஜெயராம் காவ்யாவின் நடனத்தை புகழ்ந்து பேசினார். காவ்யாவின் நடனத்திற்கு ஒத்துழைப்பு கொ டுத்த குரு காயத்ரி, குரலிசை சசிதரன், மிருதங்கம் கார்த்திகேயன், வயலின் முருகானந்தம், குழல் ரமேஷ், தம்பூரா லட்சுமிநாரயணன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி சங்கரன், ஒப்பனை முருகன் ஆகிய எல்லாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் .

– ரசிகப்ரியா

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: