Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்! அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன?

வாகனங்களுக்கான ‘ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்’ என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறி த்து தற்போது பரபரப்பாக பேச ப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தி யடி உத்தரவுதான் முழு காரண ம்

கடந்த 2005ம் ஆண்டே அமல்ப்படுத்தியிருக்க வேண்டிய இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் ஜவ்வு போன்று இழுத்து வந்தது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் இதை இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண் டதற்கு அகில இந்திய தீவிர வாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த எம்.எஸ். பிட்டா என்பவர் தான் பிள்ளையர் சுழி போட் டார்.
வாகனங்களில் உயர் பாதுகாப்பு இல்லாத நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்கள் பெருகி வருவதாகவும், இதை தடுக்க ஹை செக்யூரிட்டி நம்பர் பி ளேட் பொருத்துவதை உடனடி யாக கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய் தார்.
 
இந்த பொதுநல மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொரு த்துவதற்கான நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அடுத்த மாதம் 30ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள் ளது.
 
மேலும், புதிய வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 30ந் தேதி முதலும், பழைய வாகன ங்களுக்கு வரும் ஜூன் மாதம் 15ந் தே திக்குள் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் டை பொருத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பாதுகா ப்பு, சிறப்பம்சங்கள் முழு விபரம்:
 
சரி, ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன? உள்ளிட்ட விபரங்களை சற்று விரிவாகவே பார்க்க லாம்.
 
வாகனங்களை போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்க ளில் ஈடுபடுவதை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதுதான் ஹை செக் யூரிட்டி நம்பர் பிளேட்.
 
தவிர, வாகனம் திருடு போகும்போதும், விபத்து ஏற்படும் நேரங்க ளிலும் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் விபரங் களை வைத்து உடனடியாக உரிமையாளர் பெயர் மற்றும் விபரங்களை கண்டுபிடிக்க முடியும்.
 
ஹை செக்யூரிட்டி நம்பர் பிளே ட்டுகளை அரசாங்கம் நியமிக் கும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே வாகனங்களில் பொ ருத்தும். வாகனத்தில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொ ருத்தியவுடன் அந்த நம்பர் பிளேட்டை கழற்றவோ அல்லது பிற வாகனங்களில் பொருத்தவும் முடியாது. அப்படியொரு பக்கா வான தொழில் நுட்ப த்துடன் தயாரிக்கப்படுகிறது.
 
சமூக விரோதிகள் இதுபோ ன்று மாற்ற நினைத்து அகற் றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதா ன் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடு வதற்கு முக்கிய காரணம்.
 
இதைவிட இந்த நம்பர் பிளேட்டுகளில் ஓர் முக்கிய விஷயம், இதில் பதிக்கப்பட்டிருக்கும் குரோம் பூச்சுடன் கூடிய ஹாலோ கிராம் ஸ்டிக்கர் மூலம், சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த விபரங் களை 200 மீட்டர் தொலைவி லிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.
 
வாகனத்தின் முன்புறம் மற்று ம் பின்புறம் தவிர, மூன்றாவ தாக வாகனத்தில் முன்புற கண் ணாடியில் சிறிய நம்பர் பிளே ட் ஒன்றும் பொருத்தப்படும். இதில், வாகன எஞ்சின் நம்பர், சேஸிஸ் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆர்டிஓ விபரங்களுடன் உரிமையாளர் பற் றிய ஏ டூ இசட் விபரங் கள் அடங்கிய சிப் ஒன் றும் அந்த நம்பர் பிளே ட்டில் பொருத்தப்பட்டி ருக்கு ம்.
 
வாகனங்கள் திருடு போனாலோ அல்லது சமூக விரோத செயல் களில் பயன்படுத்தப்பட்டாலோ வாகனத்தை பற்றிய விபரங்களை இந்த சிறிய ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் மூலம் குறுகிய நேர த்தில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.
 
இந்த நிலையில், சுப்ரீம் கோ ர்ட்டின் கிடுக்கிப்பிடி உத்தர வையடு த்து, தமிழகத்திலும் ஹை செக்யூரிட்டி பொருத்து வதற்கான திட்டத்தை அம ல்படுத்தும் பணிகள் சுறுசுறு ப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனை த்து ஆர்டிஓ அலுவலங்களை யும் 6 மண்டலங்களாக பிரித்து இத்திட்டத்தை செயல்படுத்துவ தற்கான பணிகள் நடந்து வருகிறது.
 
தமிழகத்தில், விரைவில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொரு த்தப்படும் பணிகள் துவங்க உள்ள நிலையில், ஒரு நம்பர் பிளேட் பொருத்துவதற்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை செலவாகும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply