Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்பிக்கையை ஏற்படுத்தும் டே கேர் சிகிச்சை முறைகள்

அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல் வால், ஹிரண்யா எனப்படும் குடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள் போன்ற பிரச்னைகளுக் கு வயிற்றில் அறுவைச் சிகிச் சை செய்துகொண்டு, ஒரு வார ம் வரை தங்கி இருக்க வேண் டிய நிலை இருந்த ஒரு காலம் உண்டு. ஏன், இன்னமும்கூட பல மருத்துவமனைகளில் இது தான் நிலை. இந்த மாதிரி அறு வைச் சிகிச்சை செய்தால், நோ யாளி சகஜ நிலைக்குத் திரும்பு வதற்கே வாரக்கணக்கில் ஆகும். அறுவை சிகிச்சையின்போது ரத் த இழப்பு, சிகிச்சைக்குப் பிறகு வலி மற்றும் தழும்பு போன்ற இதர பிரச்னைகளும் தொடரும். மேலும், நோய்த் தொற்றுக்கான வாய் ப்பும் அதிகம். ஆனால், வளர்ந்துவரும் நவீன மருத்துவத் தொழில் நுட்பத்தால், இந்த மாதிரி பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் . அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளிக ளும் 24 மணி நேரத்துக்குள் வீடு திரும்பும் அளவுக்குத் தொழில் நுட்ப முன்னேற்ற ம். பணச் செலவும் குறைவு!

கோயம்புத்தூர் ‘கேட்வே கிளினிக்’கைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல் நோய் – லேப்ரா ஸ்கோபி அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.செந்தில்குமார் இது குறித்து விளக்குகிறார்…

”மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில் உடலில் செலுத் தப்படும் மயக்க மருந்துகள் முதற்கொண்டு மருத்துவ உபகரணங் கள் வரையிலும் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட் டன. அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட ஒரு சில மணி நேரங் களிலேயே நோயாளியை வீட்டு க்கு அனுப்பிவைத்துவிடும் அள வுக்கு மருத்துவம் முன்னேறி இருக்கிறது.

கண் நல அறுவைச்சிகிச்சைகள் நவீனத் தொழில்நுட்பத்தால் மிகச் சுலபமாக செய்யப்படுவதால்,அறுவைசிகிச்சை முடிந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே நோயாளிகள் வீடு திரும்பி விடுகின்றனர். இதனை ‘ஆஃபீஸ் சர்ஜரி’ என்போம். அதே போல, காலையில் அட்மிட் ஆகி மாலையில் வீடு திரும்புவதை ‘ஏம்பு லேட்டரி சர்ஜரி’ என்போம். பயாப்சி போன் ற சில பரிசோதனைகளும் இந்த முறை யில்தான் செய்யப்படுகின்றன. 24 மணி நேரத்துக்கும் குறைவாக மருத்துவ மனை யில் தங்கி சிகிச்சை பெறுவதை ‘டே கேர் சர்ஜரி’ என்கிறோம்.

அமெரிக்காவில், 70 சதவீதத்துக்கு மேலா ன சிகிச்சைகள் ‘டே கேர்’ அடிப்படையி லேயே செய்யப்படுகின்றன. அங்கு மருந்து வச் செலவுகள் அதிகம் என்பதால், ‘டே கேர் சிகிச்சை’ பிரபலமாக உள்ளது. எண் டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி போன்ற மருத்துவ உபகரண முன்னேற்றத்தாலும் பல சிகிச்சை முறைகள் எளிமையான விஷ யமாகிவிட்டன. வயிறு – குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் ‘டே கேர் அறுவைச்சிகிச்சை’ அதிக அளவில் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதுகுத்தண்டுவட டிஸ்க் அறு வைச் சிகிச்சைகள் உள் பட கிட்டத்தட்ட 2,500-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் ‘டே கேர்’ முறையில் செய்யப்படுகின்றன. குடல் வால், குடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள், மூல நோய் மற்றும் கர்ப்பப் பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ‘டே கேர் சர்ஜரி’ வரப் பிரசாதம்!

இதற்கு முக்கியக் காரணம் அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து துறையில் ஏற்பட்ட முன்னேற்றமும் நவீன கருவிகளின் வருகையும்தான். ஒரு காலத்தில் அறுவைச்சிகிச்சையின்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலை மாறி, இன் று மிகவும் பாதுகாப்பான, கட்டு ப்பாடான அளவில் மட்டுமே நோ யாளிக்கு மயக்க மருந்து அளிக் கப்படுகிறது. வலியை மறக்க, நினைவாற்றலைத் தற்காலிகமாக செயல் இழக்கச்செய்ய, தசைத் தளர்வுக்கு என்று புது ப்புது மருந்துகள் வந்துவிட் டன. மயக்கம் தெளிவிக்க மருந்து கொடுத்த சில நிமிட ங்களிலேயே நோயாளி நினைவு திரும்பி, சகஜ நி லைக்கு வந்துவிடுவார்கள். எல்லாவற் றுக்கும் மேலாக ‘டே கேர்’ சிகிச்சையில் வலி என்பது மிக மிகக் குறைவு.”

வயிற்றுப் பகுதியில் ஓப்பன் சர்ஜரிக்கு மாற்றாக வந் ததுதான் லேப்ராஸ்கோபி சிகிச்சை. இந்த லேப்ராஸ் கோபியை மேம்படுத்தும் வகையிலும், நோயாளிகளு க்கு வலியைக் குறைக்கும் நோக்கத்திலும் இப்போது சில உபகரணங்கள் வந்துள்ளன.

ஹார்மோனிக் ஸ்கேல்பல் (Harmonic Scalpel)

கத்தி – கத்தரிக்கு மாற்றாக வந்திரு ப்பதுதான் இந்த ஹார்மோனிக் ஸ் கேல்பல். இதைக்கொண்டு ஒரு ரத் தக் குழாயை வெட்டினாலும் கொஞ் சம்கூட ரத்தம் வீணாகாது.

வெசல் சீலிங் டிவைஸ்

வெசல் சீலிங் டிவைஸ் என்பதைக் கொண்டு 7 மில்லி மீட்டர் டயா மீட்டர் அளவு உள்ள ரத்தக் குழா யை சீல் செய்து ரத்தம் சேதாரம் இன்றி அறுவைச் சிகிச்சை செய் ய முடியும்.  

மார்சலேட்டர்

கர்ப்பப் பையில் உருவாகும் ஃபை ப்ராய்ட் கட்டிகளை மார்சலேட்ட ர் என்ற கருவியைப் பயன்படுத்தி சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி லேப்ராஸ்கோபி கருவி வழியாக வெளியே எடுத்துவிட முடியும்.

ஸ்டேப்ளர்

மலக்குடலின் கடைசி 2செமீ நீள ம் அதிக வலி உணர்வு கொண் ட பகுதி ஆகும். தற்போது செய்யப்படும் மூலநோய் சிகிச்சைகள் அனைத்தும் இந்தப் பகுதியிலேயே செய்யப்படுவதால் அறுவைச் சிகிச்சை முடிந்தபின்பு நோயாளி க்குமிகுந்தவலி உண்டாகும் .  ஆசனவாயில் சுருக்கம்கூட உ ண்டாக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஸ்டேப்ளர் அறுவைச்சிகிச்சையா னது ஆசனவாயில் இருந்து 2 செ. மீ. தாண்டி மியூகோசா என ப்படும் பகுதியில் சிகிச்சை மேற்கொள்வ தால், நோயாளிக்கு சுத்தமாக வ லி இருக்காது. இந்த மியூ கோசா பகுதியில் கத்தி வைத்து வெட் டினாலும் வலி இருக்காது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: