Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி!

அன்புள்ள அம்மாவிற்கு —

நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது.

16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்…

நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், தன் மனைவியிடம் இருக்கும் போதும், என் நினைவுடனே செல்வதாகவும், நீ இல்லா மல் நான் இல்லை என்று சொல்லி, தினமும் தொலைபேசி மூல மும், எஸ்.எம்.எஸ்., மூலமும் கூறுவார். என்னை விட, ஒன்பது வயது மூத்தவரான அவருக்கு, திருமணமாகி, 18 வயதில் ஒரு பெண் ணும், 13 வயதில் ஒரு ஆணும் உள்ளனர்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது…’ என்று நான் சொன் னதற்கு, “இனி, அவர்களையும் சேர்த்து, எனக்கு நான்கு குழந்தை கள்…’ என்றார். அவ்வாறு சொல்லவே, நானும் காதலிக்க ஆரம்பி த்தேன். தினமும் ஒரு நிமிடம் தான் பார்ப்போம்; ஆனால், தொலை பேசியில் அதிக நேரம் பேசுவோம். நான் பேசவில்லை என்றால், அவர் கஷ்டப்படுவார். காலையில் என்னை பார்த்தால்தான், அன் றைய பொழுது நல்லதாக இருப்பதாகக் கூறும் அவர், எப்போதும், ஆசை தூண்டப் பேசுவார். பல சமயங்களில் என்னை கொடுத்துள் ளேன். அப்போது எல்லாம், “எனக்கு மன நிம்மதி கொடுத்தாய்…’ என்பார்.

இவ்வாறு இருக்கையில், எங்கள் உரையாடல், வேறு ஒருவருக்கும் தெரிகிறது என்ற செய்தியறிந்தோம். அந்த மர்ம நபர், அவர் மனை விக்கு, தகாத வார்த்தைகளால் கடிதமும் எழுதி, எனக்கும், அவர் ஊரில் உள்ளவர்களுக்கும் போட்டு கொடுத்திருக்கிறார். இதற்கு, முதலில் நான்தான் காரணம் என்று அவர் கூறியதும், “நான் அவ் வாறு செய்ய மாட்டேன்…’ என்று தாலி மீது சத்தியம் செய்தேன். இதில், என்னக் கொடுமை என்றால், அவருக்கு வந்த குறுந்தகவல் ஒன்று, என் தொலைபேசி எண்ணிலிருந்து வந்ததாகக் கூறி, உனக் குதான் அந்த எண்ணம் என்று கூறி, என்னுடன் பேசாமலும், என் தந்தையிடம் நேராக சென்று, எனக்கும், அவருக்கும் உள்ள உறவை தெரிவித்தும் விட்டார். போதாது என்று, என் உயிர் நண்பர்களிட மும், என்னுடன் வேலை பார்ப்பவர்களிடமும் சொல்லி விட்டார். ஆனால், என்னை நினைக்காமல், அவரால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பது மட்டும் சத்தியம்.

இதனால், நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். பல நேரம் சாவை நோக்கிச் சென்று வந்துள்ளேன். நான் இப்போதும், அவர் ஊருக்கு தான் சென்று பணிபுரிய வேண்டும். தினமும் பார்க் கும் போது, மனது பேச துடிக்குது. என்னை இப்போதும் ஓரக் கண் ணால் பார்க்கிறார்; ரசிக்கிறார்.

நான் இப்போது என்ன அம்மா செய்வது? அவரை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். என் மீது தவறு இல்லை என்று எப்படி நிரூபிப்ப து, அவர் மீண்டும் பேசுவாரா? என்று மனசு ஏங்குகிறது. தயவு செய் து எனக்கு ஒரு நிரந்தர முடிவை தாருங்கள் அம்மா.

— அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

முப்பத்தியெட்டு வயதான நீ, 47 வயதான ஆணை காதலிக்கிறாய். இருவருக்குமே குழந்தைகள் உள்ளன. உங்களது கள்ளக்காதல், ஊர் மக்களுக்கு தெரிய, நீயே காரணம் என கருதி, உன்னுடன் பேச மறுக்கிறான் உன் கள்ளக்காதலன். அவனது அன்பை, மீண்டும் பெற வழி கேட்கிறாய்.

ஆங்கிலப் படங்களில், ட்ராகுலா எனப்படும் ரத்தக் காட்டேரி வரும். அது, ஒரு ட்ராகுலா என தெரிந்தே, பெண்கள் அதனிடம் மயங்குவர். ட்ராகுலா, தன்னிடம் மயங்கும் பெண்களின் கழுத்துகளிலிருந்து ரத்தம் குடிக்கும். அப்படித்தான் இருக்கிறது உங்களின் கள்ளக் காத லும். கள்ளக்காதல் தான் ட்ராகுலா என்றால், கள்ளக்காதலில் விழும் ஆணும் – பெண்ணும் ட்ராகுலாவால் கடிபடுபவர்.

நாட்டின் ஜனத்தொகை, 121 கோடி. அதில், 80 – 90 கோடி பேர், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அல்லாடுகின்றனர். நீயும் சம்பாதிக்கிறாய்; உன் கணவனும் சம்பாதிக்கிறான். இருவரும் குடு ம்பத்தை செவ்வனே நடத்தி, இரு குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசப்படுத்தாமல், கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறாய். நீ இப் படி இருந்தால், உன் கணவன் ஒருபக்கம் கள்ளக்காதலில் ஈடு பட்டுக் கொண்டிருந்தான் என்றால், குழந்தைகள் கதி என்னாகும்? உன்னிடம் தொடர்பு வைத்திருக்கும் ஆணின் மனைவி, தனியே என் ன செய்கிறாளோ?

கள்ளக்காதலில் நான்முனை போட்டி!

உனக்கும், உன் கள்ளக்காதலனுக்கும் இடையே புகுந்து, மூன்றாம வன் உன் உடலை பங்கு கேட்கிறான். கேட்கவே அருவெறுப்பாய் இல்லை?

மொட்டைக் கடிதம் நீதான் போட்டாய் என, உன் கள்ளக்காதலன் கூறுகிறான். இதனால், இரு விஷயங்கள் புலனாகின்றன. உன்னுட னான தொடர்பை முறித்து, அவன் வேறெங்கோ பாயத்துடிக்கிறா ன். அதன் காரணமாக, அவனை கை நழுவ விடாது, நீ மொட்டை கடிதம் போட்டிருக்கலாம் என அவன் நினைக்கிறான். தவிர, நம் மிடம் தகாத உறவு கொண்டிருப்பவள், எது வேண்டுமானாலும் செய் வாள் என்ற இழிவான எண்ணம் அவனுக்கு.

கள்ளக்காதலனுக்கு நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என, உன் கணவன் கட்டிய தாலி மீது சத்தியம் செய்திருக்கிறாய். உன் னுடைய பதிவிரதைத் தனம், மெய்சிலிர்க்க வைக்கிறது. உன் மீது சந்தேகப்பட்டு, கள்ளக்காதலன் உங்களுக்கிடையே ஆன உறவை, உன் தந்தையிடமும், உன் உயிர் நண்பர்களிடமும் போட்டுடைத்து விட்டான். இருந்தும் அவனின், “சிரிப்பை’ பார்த்து மயங்குகிறாய், கிறங்குகிறாய். கள்ளக்காதலன் தன் காதலியிடம் பேசும் ரெடிமேட் வசனங்களில், இரண்டைதான் உன் கள்ளக்காதலன் உன் மீது எடுத்து வீசியுள்ளான்.

உன் கடிதத்தை வைத்து, உன் குணாதிசயத்தை கீழ்க்கண்டவாறு யூகித்துள்ளேன்…

நீ உணர்ச்சிக்கு அடிமை. இதுபோன்ற செய்கைகள் உனக்கு புதித ல்ல. ஏற்கனவே சில உறவுகள் இருந்து மறைந்திருக்கின்றன. குழந்தைகளின் எதிர்காலத்தை சிறிதும் நினைக்காத சுயநலவாதி. பொருளாதார சுதந்திரத்தை தவறான விதத்தில் பயன்படுத்தும் பெண் நீ. விஷயம் தெரிந்தால், கணவன் நம்மை கொன்று விடுவா னோ, விவாகரத்து செய்து விடுவானோ என்ற பயம் துளியும் இல் லை உனக்கு. கணவன், பொம்மைக் கணவனாக தெரிகிறான். மொட்டைக் கடிதம் எழுதினாயோ, இல்லையோ தெரியாது. ஆனா ல், மொட்டைக் கடிதம் எழுதும் அளவிற்கு உன் மனம் வக்கிர மடைந்து போயிருப்பது லட்சம் சதவீதம் உண்மை.

நான், என்ன ஆலோசனை தர வேண்டும் என நினைக்கிறாய்? கள்ளக்காதலனை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர, கறுப்பு வழி கள் கூறுவேன் என நினைத்தாயா? அதெப்படி முடியும்? பண்பாடு, கலாசாரம் தாண்டி, மனிதாபிமானமாய் பார்த்தாலும், உன் செய்கை யை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. உன் கள்ளக் காதலால் மூன்று குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கப் போகின்றன.

உன்னுடைய வயது அடித்துத் திருத்தக்கூடிய வயதல்ல.

பசி தாளாது, பக்கத்து இலையிலிருந்து ஒரு வாய் திருடி தின்றிருந் தால் மன்னிக்கலாம்; ஆனால், நீங்கள், கேவலம், த்ரிலுக்காக எச் சில் இலை பிரியாணி தின்ன போட்டி போடுகிறீர்கள்.

ஒரு துளி காமத்திற்காக, குழந்தைகளின் ஆயுட்காலங்களை நாச மாக்க வேண்டுமா? ஆற அமர யோசி. இன்னும் நீ, 30 – 40 வருடம் வாழ விரும்பினால், உன் குழந்தைகள் மருத்துவராக, பொறியாள ராக விரும்பினால், உன் கள்ள உறவை துண்டித்து விடு. உன் துர்நட த்தை, உன் ஐந்து தலைமுறைக்கு அவமானம். இனி, கள்ளக் காத லனின் ஊரில் பணிபுரியாதே. வேறொரு ஊருக்கு மாற்றல் வாங்கிப் போ.

மெய்யான தாயன்பு, தன் பொருந்தாத காமத்தை கருக்கிக் கொள்ளு ம். மனக்கட்டுப்பாட்டை பெருக்கு. சமூகம் உன்னை அங்கீகரிக்கும்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply

%d bloggers like this: