Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் என்றாலே புரியாத புதிரா??

பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசை யா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண் கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்து விடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத காரியம் என்று தத்துவம் பேசும் ஆண்கள் ஒரு ரகம். காதலியின் மனதை அறிந்து கொ ண்டு அவர்களை கவர நினைக்கிறீர்களா ? இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

காதலில் வெற்றிபெறவும், மகிழ்ச்சிக்கா ன திறவு கோலாகவும் திகழ்வது நம்பிக் கை. உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்புறம் உங்க காதலி யைப் பத்தி முழுவதுமா தெரிந்து கொள் வது அவசியம். அதனால் வாழ்க்கையை பொறுத்த வரைக்கும் உங்க காதலி விரும்பக் கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…
 
பெண்கள் பலவிதம்
 
ஒவ்வொரு பெண்ணும் வித்தியாச மானவங்க. சில பேருக்கு பிங்க் கல ர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன் ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண் கள் குதிரைகள்னா ரொம்ப விரும்பு வாங்க. இன்னும் சொல்லப்போனா .. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்” -னா ரொம்ப விரும்பு வாங்க. விருப் பங்களிலேயே இத்தனை வித்தியாச ங்கள் இருக்கு. அதனால பொதுவா ன விஷயங்கள் எல்லாமே பெண்க ளுக்கு பிடி க்கும்னு நினைக்காதீங்க.
 
எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். அதனால எந்நேரத்திலும் இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமை யாக தெரிஞ்சு வையுங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. அவங் க சொல்றதை பொறுமையா காதில வாங் கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.
 
ரொமான்ஸ் அவசியம்
 
அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும்போது அவ ங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப் படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட் ட சொல்லுங்க.ஏன்னா பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனு பவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கு ம் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளி க்கொண்டு வர முயற்சிப்பாங்க.
 
இன்னொரு விஷயம்… தன் காதலன் மட் டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக் கல என்றால், அவங்க ரொம்பவே “டல்” ஆய்டு வாங்களாம். அதனால உங்களு டைய அன்பான பேச்சாலும் அரவணைப் பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங் க.
 
தலைமைப் பண்பு
 
என்ன செஞ்சாலும் சில பெண்களை கவர வே முடியாதுங்க. அப்படிப்பட்ட விதிவில க்கான பெண்களை அறிவுப்பூர்வமாக பேசி அசத்தலாம். தன்னம்பிக்கை நிறைந்த, தலைமைப் பண்பு கொ ண்ட ஆண்களை சிலர் விரும்புவாங்க. அப்படிப்பட்ட பெண்களை அவங்களுக்கு ஏற்றார்போல பேசி கவர லாம். ஒருசிலர் சமூக ஆர்வலரா இருப்பா ங்க, சமுதாய சேவை செய்வது அவங்களு க்குப் பிடிக்கும். அந்த மாதிரி பெண்களை அவங்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொ ண்டு அசத்தலாம்.
 
உங்க காதலி எப்படிப்பட்டவங்க அதை தெரிந்து கொண்டு அசத்து ங்கள். அவங்க குட்புக்கில் இடம் பெற்றுவிட்டால் உங்கள் காதல் வெற்றிதான்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: