ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலத்தில், டேனியும் அவன் அப் பாவும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்த சமயம் நடந்தது இது. அவன் அப்பா நெருங்கிய நாற் பதுகளில் இருப்பதால், காதோரங்க ளி ல் நரை அங்கொன்றும் இங்கொ ன்றுமாய் விழத் துவங்கியிருந் ததைக் கவனித்த டேனி அப்பாவி டம் கேட்டான்.
“ஏம்பா… உனக்கு முடியெல்லாம் வெள்ளையாயிட்டு இருக்கு.?”
சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவனை நல்வழிப்படுத்த
தவறமாட்டார் அவர் என்பதா ல் யோசித்தபடியே சொன்னா ர். “அது வா… டேனி அவன் அப்பா சொல்றது கேக்காம குறும்பு பண்ணற ஒவ்வொரு தடவையும் அவனோட அப்பா வுக்கு ஒரு தலைமுடி வெள் ளையாகணும்னு கடவுள் சொ ல்லிருக்காரு… அதனாலதான்.! நீ மட்டும் குறும்பு பண்ணாம, அப்பா சொல்படி கேட்டு நல்ல பைய னா நடந்தா… அப்பா தலைமுடி வெள்ளையாகாது சரியா..?”.
அப்பா சொல்வதை அப்படியே நம்பிக்கையுடன் கேட்ட டேனி, “சரிப்பா..!” என்றவன் தொடர்ந்து கேட்டான்.
“ஏம்பா… அப்ப தாத்தா தலைமுடி எல்லாம் ஏன் ஃபுல்லா வெள்ளை யா இருக்கு..?”.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்