வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண் டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமா னால், இன்னும் நல்ல முறை யில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடி யும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம்.
1.முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்க வும்.
2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து டேபிள்ஸ் குரூப்பில் (Tables group) உள்ள டேபிள் (Table) ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Convert Text To Table என் பதனைத் தேர்ந்தெடுக்கவும். (நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவ ராக இருந்தால், டேபிள் மெனு பெற்று, அதில் Convert என்ற பிரி வில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் துணை மெனுவில் Text To Table என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திட, பட்டியலில் உள்ள டேட்டாவிற் கேற்றபடி டேபிள் அமைக்கப்பட்டு கிடைக்கும். பெரும்பாலான நேரங்களில் நாம் எதிர்பார்த்த வகையில், டேபிள் இருக்காது. எனவே சில சிறிய மாற்றங்களை, அகலத்தை அதிகப்படுத்துவது, உயரத்தைக் குறை ப்பது போன்ற, ஏற்படுத்தலாம். இதற்கு டேபிள் மெனுவில் கொடு க்கப்பட்டுள்ள டேபிள் டெம்ப்ளேட்டுகளைப் பெற்று நமக்குப் பிடித் தமான டேபிள் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
ரிப்பன் இன்டர்பேஸ் உள்ள வேர்ட் தொகுப்பு பயன்படுத்துபவர்கள், Live Preview தேர்ந்தெடுத்து அதில் உள்ள டிசைன் ஏதேனும் ஒன் றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். வேர்ட் 2003 தொகுப்பில் இந்த வசதி Table AutoFormat என்பதனைக் கிளிக் செய்து கிடைக்கி றது.
டேபிள் வேண்டாம் என எந்த கணத்தில் முடிவு செய்தாலும், டே பிள் மெனு சென்று, Convert To Text தேர்ந்தெடுக்க, டேபிள் மீண்டும் டெக்ஸ்ட்டாக அமைக்கப்படும்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்