Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

50 அடி தூரம் பறக்கும் ”தங்க மரப் பாம்பு” – வீடியோ

பாம்பினங்களிலேயே மிகவு ம் அழகிய நிறங் கொண்ட பாம்பு பறக்கும் பாம்பு ஆகும். உண்மையில் இது பறவைக ள் போல் பறப்பதில்லை. ஆ னால் உயர்ந்த மரக்கிளையி லிருந்து கீழே உள்ள கிளை க்கு காற்றில் எழும்பிச் செல்கிறது. மேலும், இ வை ஒரு மரத்திலிருந்து பல மீற் றர் தொலைவில் உள்ள இன் னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும். மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்க ளிடையே தாவிச் செல்லக்கூடியது.

ஏறத்தாழ ஒரு மீற்றர் நீளம் கொண்டு காணப்படும் இப்பாம்பின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும். அதில் ஆங்காங்கே மஞ்சள் மற் றும் வெண்மை நிறங்கொண்ட வளையங்களும், அவற்றின் நடு வில் பொட்டு வைத்தது போன்று சிவப்புப் புள்ளிகளும் காணப்படும்.

இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக் கொண்டிரு க்கும் இந்தப் பாம்பு அணிகல மரப் பாம்பு என்றும் தங்க மரப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு காணப்படும் பாம்புகளில் 50 அடி தூரத்திற்கு பறக்கும் பாம்பினைக் காணொளியில் காணலாம்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: