Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் . . . .!

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது . ஆஸ்திரேலியா நாட்டவர்கள் தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேர ழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களு க்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது.
 
இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் கடலில் உரு வாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அத ன்படி ஒவ்வொரு பிராந்தியத்தி லும் நாடுகள் ஒன்றிணைந்து புய ல்களுக்கு பெயர் வைக்கும்மு றை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல் களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெ யர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதே சம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகு ம் புயல்களுக்கு என்ன பெய ர் வைக்கலாம் என்பதை இந் த எட்டு நாடுகளும் பட்டிய லாக தயாரித்து கொடுத்துள் ளன. அந்த பட்டியலில் உள் ள பெயர்கள்தான் ஒவ்வொ ன்றாக புயல்களுக்கு சூட்டப் படுகின்றன. கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன.
 
கடந்த 2010-ம் ஆண்டு ஐந்து தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்க ளுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெய ரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடு த்திருந்தன. இதில், லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பர பரப்பை ஏற் படுத்தின.
 
2011-ம் ஆண்டு அக்டோபர் மாத த்தில் முதல்முறையாக புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வுசெய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவதாக தோன்றிய புய லுக்கு தானே என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை வழங் கிய நாடு மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவி யல் நிபுணர் மின் தானே கா பெ யரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த வரிசையில் அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய் லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா)  என்று பெ யர்கள் சூட்டப்படவுள்ளன.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: