Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இருட்டை விரட்டுவோம்?

மார்ச் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

சம்ஞசாரம் இல்லாமல் கூட வாழ  முடியும். . . ஆனால், மின்சாரம் இல்லாமல் வாழவே முடியாது . . . என்ற நிலைக்கு அன்றாடங் காய்ச்சி முதல் அம்பானி வகையறாக்கள் வரை தள்ள‍ப் பட்டு விட்ட‍னர். மனிதர்கள் உழைக்கிற 16 மணி நேரத்தில் எட்டு மணி நேரம் மின்வெட்டு என்றால் எப்ப‍டி உற்பத்திப் பெருகும்? எப்ப‍டி தொழில் வளம் கூடும்? எப்பொழுது தமிழகம் குஜராத்தை மிஞ் சும்?

மின்வெட்டை சமாளிக்க‍ ராட்ச்ச‍ ஜென ரேட்டர்களைப் பயன்படுத்த‍  வேண்டியி ருப்ப‍தால், மின்சார பற்றாக்குறையைத் தொடர்ந்து டீசல் பற்றாக்குறை ஏற்படும் நாள் தமிழகத்தில் வெகு தொலைவில் இல்லை.

நாடு முன்னேறவேக் கூடாது என்று எதற்கெடுத்தாலும் எதிர்ப்பைத் தெரிவித்து விளம்பரம் தேடிக் கொள்கிற கோஷ்டிகளாலும், பரபர ப்பான செய்திகளை மிகைப்ப டுத்தும் காட்சி ஊடகங்களாலு ம், கூடங்குளம் கூடாத குளமா கிவிடும் போலிருக்கிறது. செய ல்பாட்டில் இருக்கும் மின்னுற் பத்தி நிலையங்களை பராமரிக் காதத‍ன் விளைவாக அவற்றி ல் பாதிபரலோக பதவி அடை ந்துவிட்ட‍ன• தனியாரிடமிருந் து மின்சாரம் பெறலாம் என் றால், தமிழக கஜானாவ கை யை விரிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சொல்வதென்றால், இனி கடவுளால் கூட கரண்ட் தர முடியாது அப்போ என்ன‍தாங்க செய்யறது?

* அரசு விழாக்கள், கட்சிகளின் மாநாடுகள், ஜாதி சங்க கூட்ட‍ங்கள், எல்லாவற்றையும் ஓராண்டு க்கு தடை செய்ய‍ வேண்டும். (அடேயப்பா  எவ்வ‍ளவு விள க்குகள்)

* கம்பிபோட்டு மின்சாரம் திருடுவோரை குண்டர் சட்ட‍ த்தில் உள்ளே தள்ள‍வேண் டும்.

* ஆளாகாத பெண்ணுக்கு திருமணம் செய்வதுபோல் இருக்கும் மின்சாரத்திற்கே வழியில் லாமல் தரப்படுகின்ற இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் திட்ட‍த்தை ஓராண்டுக்கு நிறுத்தி வை க்க‍ வேண்டும்.

* வீடுகளில் அலுவலகங்களில் ஆளுக்கொரு குளி ர்சாதன வசதி பொருத்த‍ப்பட்ட‍ அறைகளில் இருப் ப‍தை அறவே தவிர்க்க‍ வேண் டும்.

* தேவைப்பட்டால் அரசாங்கம் மின் உபயோகத்திற்கு உச்ச வரம் பை ஓராண்டிற்கு செயல்படுத்த‍ வேண்டும்.

உருப்படியான இந்த திட்ட‍ங்களை கடுமை யான சட்ட‍த்தின் துணை கொண்டு முறை யான கண்காணிப்புடன் செயல்படுத்தி தமிழகத் தை ஒளிரச்செய்ய‍ அரசு உடனே உரத்து சிந்திக்க‍ வேண்டும்.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply