பாரதிய ஜனதா எம்.எல்.ஏவுடன் சமூக சேவகி கள்ளத்தொடர்பு. ஆபாச வீடியோ சிக்கியதால் பரபரப்பு.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந் தவர் ஷீலா மசூத் சமூக சேவகி. இவருக்கும் அம்மாநில பா.ஜனதா துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான திருவ் நாராயண்சிங் என்ப வருக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. இதேபோல் திருவ் நாராயண்சிங்குட ன் போபாலைச் சேர்ந்த உள் அலங்கார நிபு ணர் ஷாகிதா பர்வேஷ் என்பவரும் தொடர்பு வைத்திருந்தார்.
நாராயண்சிங் ஷீலாவுடன் பழகுவது பர்வேசுக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவர் கூலிப்படை உதவியுடன் ஷீலாவை தீர்த்து க்கட்ட முடிவு செய்தார். இதன் படி கூலிப்படை தலைவன் சாகிப் அலி என்ற ஷியம் என்பவன் மூலம் ஷீலாவை கொலை செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த சி.பி. ஐ. போலீசார் ஷீலா கொலை யில் ஷாகிதாவுக்கு தொடர்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடு த்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி சி.பி.ஐ. போலீசார் ஷாகிதா, ஷியாம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் சி.பி.ஐ. போலீசார் போபால் மகா ரானா பிரதாப்
நகரில் உள்ள ஷாகிதா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப் போது ஷாகிதா, பா.ஜனதா எம்.எல்.ஏ. நாராயண்சிங்குடன் உல்லா சமாக இருப்பது போன் ற 2 ஆபாசபட சி.டி.க்கள் கிடை த்தது. அவற்றை சி.பி.ஐ. போலீ சார் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும் போது, இந்த ஆபாச சி. டி.யை ஷாகிதாதான் எடுத்துள்ளார். அவர் எம்.எல்.ஏ.வை மயக்கி அவருடன் உல்லாசமாக இருப்பதுபோல் எடுத்துள்ளார். இதேபோ ல் அவர் 2 ஆபாச சி.டி. எடுத்துள்ளார்.
இந்த ஆபாச சி.டி.யை ஷாகிதா எதற்காக எடுத்தார் என்பது பற்றி தெரியவில்லை. ஒரு வேளை எம்.எல்.ஏ.வை மிரட்டுவதற்காக இந் த
சி.டி.யை அவர் தயாரித்தி ருக்கலாம் என்று கருதுகி றோம். இது வரை அவர் ஷீலாவை எதற்காக கொன் றார் என்பது மர்மமாக உள்ள து. எனவே அவரிடம் உண் மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அவரிடம் ‘பிரைன் மேப்பிங்’ (மூளை படப்பிரிவு) பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள் ளோம். இப்பரிசோதனைகளுக்கு பிறகு இக்கொலையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.
இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. நாராயண் சிங்கிடம் ‘பாலி கிராப்’ பரிசோதனை நடத்த இந்தூர் சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் நாராயண்சிங்
கி டம் பாலி கிராப் சோதனை நட த்த திட்டமிட்டுள்ளனர்.
இப்பரிசோதனை மூலம் அவரு க்கு ஷீலா கொலையில் தொட ர்பு இருக்கிறதா? என்பது உறுதி யாக தெரிய வரும். இவ்வழக் கில் சி.பி. ஐ. போலீசார் பல் வேறு ஆதாரங்கள் திரட்டி வரு கிறார்கள். இவ் வழக்கில் ஷாகி தா தயாரித்த ஆபாச சி.டி. முக் கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்