சினேகா- பிரசன்னா திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இது காதல்
திருமணம் ஆகும். இருவரும் “அச்ச முண்டு அச்சமுண்டு” படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். கடந்த மாதம் 14- ந்தேதி காதலர் தினத்தன்று சினேகா வும், பிரசன்னாவும் மோதிரம் மாற் றிக் கொண்டார்கள்.
திருமணத்தை மே மாதம் 11-ந்தேதி நடத்த முடிவாகி உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்க டேஸ்வரா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. ஒரு நாள் முன்ன தாக மே 10-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திரு மணம் பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே திருமண தேதி யை அறிவித்துள்ளதாக பிரசன்னா கூறினார்.
தற்போது “விடியல்”, “ஹரிதாஸ்” படங்க ளில் நடித்து வருகிறார். ஒரு கல் ஒரு கண் ணாடி படத்தில் ஒரு காட்சியில் தோன்று கிறார். அடுத்த மாதம் இறுதிக்குள் நடிக்க வேண்டிய படங்களை முடித்து கொடுத்து விட திட்டமிட்டு இருக்கிறார். புதுப்படங்களுக்கு எதுவும் ஒப்பந்த மா கவில்லை. திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி குடும்ப பொறுப்பை ஏற்க உள்ளார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்