Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மணிக்கு 410 கிமீ வேகம் செல்லும் உலகிலேயே அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு

உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த கார் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், விட்டெஸி ரக 20 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருப் பதால் அதிக உறுதி கொண் டதாக இருக்கும். இதன் ஸ்பா ய்லர் காற்றை கிழித்துக் கொ ண்டு செல்லும்போது வரும் சப்தத்தையும் வெகுவாக குறைக்கும். மேலும், இந்த காரின் பிரத்யேக வடிவமை ப்பால் டாப் இல்லாத கார் போன்ற உணர்வை டிரைவ ருக்கு ஏற்படுத்தாது என்று புகாட்டி தெரிவிக்கிறது.

காரின் உட்புறமும் காற்று உட்புகாத வகையில் சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரையிலும் செல்லும் என்று புகாட்டி தெரிவிக்கிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கார் உலகின் அதிவேக டாப்லெஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply