Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனிமேலும் நான் அப்படித்தான் – நடிகை அசின்

சினிமாவிற்கு வந்த புதிதில் நிறைய கஷ்டங்களை பார்த்து விட்ட தாக நடிகை அசின் கூறியுள்ளார். தமி ழில் நம்பர்-1 நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினியால் பாலிவுட்டுக் கு போனார். முதல் படமே ஹிட்டாக தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவ னம் செலுத்தி வந்த அசின், கடைசியா க தமிழில் விஜய்யுடன் காவலன் படத் தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினி மா பக்கமே தலை காட்டாத அசின், இப்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் ஐதரபாத்திற்கு வந்த அசின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்தேன். ஆரம்ப காலத்தில் சினிமாவிற்கு வந்த போது நிறைய கஷ்டங்களை பார் த்து விட்டேன். அப்போது யாரும் எனக்கு உதவவில்லை. என்னு டைய சொந்த முயற்சியால், தனி யாக போராடிதான் முன்னுக்கு வந்திருக்கேன். இனிமேலும் அப் படித்தான். சினிமாவில் நிலைக்க திறமை தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: