Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செல்போன் மோசடி – எச்சரிக்கை தகவல்கள்

கிரெடிட் கார்டு மற்றும் இ-மெயில் மோசடிகளுக்கு அடுத்ததாக, மோசடி ஆசாமிகள் புதிதாக கை யாளும் தந்திரம்தான் செல்போன் மோசடி. பெரு நகரங்களில் வசித் து வரும் மக்களைத்தான் குறி வை த்து எஸ்.எம்.எஸ். அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டும் இத் தகைய மோசடி ஆசாமிகள் ஏமா ற்றி வருகின்றனர்.

பெரும்பாலும், இதுபோன்று வரும் அழைப்புகள் மாநில அழைப்புகளா கவோ, அல்லது வெளிநாட்டு அழைப்புகளாகவோ இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே, இவை அனைத்தும் வெளிநாடு களில் இருந்து வருவது கிடையாது. சர்வதேச சிம் கார்டுகளை வாங்குவதும், எந்தவித தடங்கலும் இல் லாமல் அதனை உபயோக ப்படுத்துவதும் தற்போது மிகவும் எளிதாக விட்டது. டெல்லியில் நேரு பகுதி மற்றும் கபார் மார்க்கெட் பகுதி களில் உள்ள கள்ளச் சந்தைகளில் இந்த வகையான சிம் கார்டுகள் எளிதாக கிடை க்கின்றன. அந்த பகுதியில் கடை போட்டுள்ளவர்களிடம் நம்பிக்கையா னவர் ஒருவரை அழைத்துச் சென்றால் அவற் றை வாங்கலாம்.
 
இந்தியாவின் தொலைபேசி குறியீட்டு எண் +91. பாகிஸ்தான் நாட் டின் டெலிபோன் குறியீட்டு எண் +92. இது இந்தியாவின் குறியீட்டு எண்ணுக்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருப்பதால், இங்குள்ள மோசடி ஆசாமிகள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வர்களை தொடர் கொள்ளும்போது, பெரும்பாலும் பாகிஸ்தான் சிம் கார்டுகளையே உபயோகப்படுத்தி வருகின்றனர்.
 
2010-11-ம் ஆண்டில் சர்வதேச அளவில் செல்போன் குற்றங்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளன. அதிலு ம் குறிப்பாக இந்த வகையான குற்றங்களில் அதிகமாக பாதிக்க ப்படுபவர்கள் ஆண்களாகவே இரு க்கின்றனர். ஏனென்றால், அதிகப் படியான நேரத்தை செல்போனிலேயே கழிப்பதிலும், புதியவர்களு டன் தொடர் கொண்டு நட்பை வளர் ப்பதிலும் ஆண்கள்தான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.
 
எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி மோசடி செய்வதிலும் தற்போது வித்தி யாசமான வழிவகை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வரக்கூடிய மோசடி குறுஞ்செய்திகள், பெரு ம்பாலும் +92, +44, +33  என்று சர்வ தேச தொலைபேசி குறியீ ட்டு எண்களுடனேயே இருக்கு ம். உண்மையில் இந்த குறுஞ் செய்திகள் அனைத்தும் வெளி நாட்டில் இருந்து வருவது இல் லை. உங்களுக்கு அருகாமை யில் இருந்தோ, அல்லது அண் டை மாநிலங்களில் இருந்தோ தான் அனுப்பப்படுகின்றன.
 
எப்படியெனில், இந்த மோசடி பேர்வழிகள் தங்களுடைய செல்போன் எண்களை, இன்டர்நெட்டில் அதற்கென்று உள்ள சில தளங்களில் பதிவு செய்து வைத்து விடுகின்ற னர். அமெரிக்கா, இங்கிலாந்து போ ன்ற நாடுகளில் இத்தகைய இணையதளங்களுக்கு சட்டப்படி முழு அனுமதி உண்டு. இதில், பதிவுசெய்து வைத்துள்ள வாடிக் கையாளர்கள் இன்டர்நெட் மூல மாக வழக்கத்தை விட மிகவும் குறைவான கட்டணத்திலேயே பேசலாம், ஆன்லைன் மூலமாக மொத்தம் மொத்தமாக குறுஞ் செய்திகளும் அனுப்பலாம். பதிலுகு நீங்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் கூட, அந்த அழைப்பானது, இன்டர் நெட் புரோடோகால் வழியாகத்தான் அவருக்கு செல்லும்.
 
எனவே, நீங்கள் அவருடன் பேசலாம். ஆனால், இந்த வகையான அழைப்புகள் எங்கிருந்து வந்துள்ளன என்பதை கண்டுபிடிக்க முடியாது. அதேபோன்று அந்த அழைப்பை மறுபடி யும் ‘டிரேஸ்’ செய்யவும் முடியாது. நம் முடைய தகவல்கள் மற்றும் செல்போன் எண்கள், எவ்வாறு மோசடி ஆசாமிகள் கைகளில் சிக்குகிறது என்பது நமக்கு வியப்பாக தோன்றலாம். இதற்கான விடை வெகு தொலைவில் இல் லை. சில நேரங்களில் நம்முடைய செல்போன் நிறுவனங்களை சேர்ந்தவர்களே, கொடுத்து விடுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக் கக் கூடிய தகவல்.
 
சில காரணங்களுக்காக நீங்கள் அளிக்கும் சுயவிவரம் குறிப்பு உள் ளிட்ட தகவல்கள் மூலமாகவும் நம்முடைய விவரங்கள் மோசடி ஆசாமிகள் கைகளில் எளிதில் சிக்கிவிடுகின்றன. இதுதவிர, நம் நாட்டில் உள்ள தொலைத் தொடர்பு பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் பலவீனமானதாக வே இருக்கின்றன. இதனால், பிரபலமான செல்போன் நிறுவ னங்களிடம் இருந்து மிகவும் சுலபமாக யார் வேண்டுமானா லும் செல்போன் இணைப்பை பெற்றுக்கொள்ள முடிகிறது.
 
இந்தியாவில் தகவல் பாதுகாப்புக்கென்று தனியாக சட்டங்கள் எது வும் கிடையாது. தகவல் தொழில் நுட்ப சட்டமானது, தகவல் என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. ஆனால் தகவல் பாதுகாப்பை பொறுத்தவரை அமைதியாகவே இருக்கிறது. அதேபோன்று, இந்தி யாவில் தற்போதைக்கு தகவல் பாது காப்பு வெளியீடுகள் அனைத்தும் ரக சிய சட்டங்கள் வாயிலாகவே சோத னை செய்யப்படுகின்றன. இதுபோது மானதாக இல்லை. இதுபோன்ற காரணங்களால் யார் வேண்டுமா னாலும் எளிதாக தகவல் திருட்டுக ளில் ஈடுபட முடிகி றது.
 
நுகர்வோர் மின்சாதன தயாரிப்பு நிறு வனங்கள், உள்ளூர் விடுதிகள், கால் சென்டர்கள் போன்றவை கூட பல் வேறு விவரங்களில் இருந்து நம்முடைய செல்போன் எண்களை எடுத்துக் கொள்கின்றன.  இதே போன்றுதான், மோசடி பேர்வழிகளு டைய கைகளிலும் நம்மை பற்றிய தகவல்கள் எளிதாக சிக்கி விடு கின்றன. தேவை எச்சரிக்கை.!
 

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply