Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்வெளி ஆய்வுக்கு வழிகாட்டும் பி.டெக்., பிசிகல் சயின்ஸ் படிப்பு

பூமியையும், இதர கோள்களையும் நகர்த்துவது எது? வான வில்லின் வண்ணங்கள் ஏன் வரிசையான அமைந்துள்ளன? என்பன போன்ற கேள்விகள், வானத்தை ஆராயும் நபர்களுக்கு இயற்கை யாக வருவதுதான்.

ரகசியங்களுக்குள் ரகசியமாய், இறைவனுக்குள் இறைவனாய் திக ழும் விண்வெளி பற்றி பலருக்கும் தீராத ஆவல் உண்டு. அதன் மர்மங் களை அறிந்துவிட மாட்டோமா! என் று ஏங்குவோரும் உள்ளனர்.

வானியல் தொடர்பான பல கேள்வி களுக்கான பதிலை B.Tech., Physical science படிப்புக் கொண்டுள்ளது. இந் தப் படிப்பு சட உலகைப்(inorganic) பற்றி படிப்பதாகும். வானியல், இயற் பியல், வேதியியல் மற்றும் பூகோள அறிவியல் ஆகிய 4 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதுதான் இந்தப் படிப்பு என்று ஒருவர் நினைக்கலாம். இந்த ஒவ்வொன்றும், தனித்துறைகளாகவும், துணைப் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு ள்ளன.

வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தே வைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த B.Tech., Physical science படிப்பு வடிவ மைக்கப்பட்டுள்ளது. இந்தப் படி ப்பின் மூலம் ஒரு மாணவர், பூமிக்கு வெளியே மறைந்துள் ள பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். பூமியிலு ள்ள ஒட்டுமொத்த பெளதீகப் பொருட்களின் அளவு, புவி சுழ ற்சி, சோலார் அமைப்பில் இதர பூகோள அம்சங்களுடன் அவற்றின் தொடர்பு உள்ளிட்ட விஷயங்க ள் அவற்றுள் முக்கியமாவை. மேலும், தொலைநோக்கு சாதனங்க ளின் மூலமாக விண்ணுலகப் பொருட்களை ஆராயும் Optical Astronomy போன்ற பாடங்களும் உள்ளன.

B.Tech., Physical science பட்ட தாரிகளுக்கு, ISRO, DRDO, Indian Institute of Meteorology போன்ற நிறுவனங்களில் வே லை வாய்ப்புகள் காத்திருக்கி ன்றன. B.Tech., Physical science பட்டம் வைத்து ள்ள ஒருவர், வாயு மண்டல பண்புக் கூறுகளை ஆராயும் Atmos-pheric விஞ்ஞானியாகவும், வாயு மண்டலத்திலுள்ள ரசாய ன மற்றும் பிசிக்கல் அம்சங்கள், ஒளி, ஒலி கடத்தல், ரேடியோ கதிர்கள், சூழலியலில் நடைபெறும் ஆற்றல் பரிமாற்றம் ஆகிய வைப் பற்றி ஆராயும் Physical Meteorologist என்ற நிலையிலும் பணி புரியலாம்.

Physical science பாடங்கள்

Astronomy, Astrophysics, Atmospheric & Ocean sciences, Remote Sensing, GIS and Chemical Systems.

இப்படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனம் – IIST, Thiruvananthapuram

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply