Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

100 கி.மீ., மைலேஜ் கார்:டாடா மோட்டார்ஸ் அதிரடி

உலகளவில் மிகவும் விலை குறைந்த நானோ காரை உருவாக்கிய பெருமை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. இத்து டன் டீஸலில் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறு வனம் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளது. இந்த நிறுவனத் தின் ஆராய்ச்சி இத்துடன் நிற்க வில்லை. அதிக மைலேஜ் தரும், காரை உருவாக்குவதில் தற் போது டாடா மோட்டார்ஸ் நிறு வனம் வெற்றி கண்டுள்ளது. ஜெனிவாவில் சமீபத்தில் நடந்த வாகன கண் காட்சியில்,” டாடா மெஹாபிக்ஸல்’ என்ற புதிய காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவ னம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு ஹைபிரீடு வகை கார். இவ்வகை கார்களில், பேட்ட ரியில் இயங்கும் வகையி லும், பெட்ரோலில் ஓடும் வகையிலும், இரண்டு வச திகளும் இடம் பெற்றிருக்கு ம். ஆனால், இந்த இரண்டு வசதிகளும் தனித்தனியாக செயல்படும். இந்த அம்சத் தை தான், பல்வேறு ஆய்வு கள் மூலம், டாடா மோட்டா ர்ஸ் நிறுவனம் மாற்றி அமைத் துள்ளது. “டாடா மெஹாபிக்ஸல்’ காரில் லித்தியம் அயன் பாஸ் போட் பேட்டரியும், ஒரு லிட்டர் பெட் ரோல் இன்ஜின் ஜெனரே ட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால், இந்த ஜெனரேட்டர் இயங்கி, பேட்டரியை தேவைப்படும் போது சார்ஜ் செய்யும்.

பொதுவாக, பேட்டரி கார்களை சார்ஜ் செய்ய, அதற்கான ஸ்டே ஷன்களுக்கு தான் கொண் டு செல்ல வேண்டும். ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக, 50 முதல் 60 கி.மீ., வரை யே செல்ல முடியும். ஆனா ல், “மெஹாபிக்ஸல்’ காரி ல், பேட்டரியை சார்ஜ் செய் ய, அதற்கான ஸ்டேஷனை தேடிச் செல்ல வேண்டாம். அதில் பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் இன்ஜின் ஜெனரேட்டரே அந்த பணியை செய்து விடும்.

இந்தியா போன்ற நாடுகளில், பேட்டரி கார்கள் எடுபடாமல் போன தற்கு, அதற்கான சார்ஜ் ஸ்டேஷன்கள் அதிகளவில் அமைக்கப் படாமல் இருப்பதே காரணம். இதற்கு அதிக செலவாகும். ஆனால், இப்போது இந்த பிரச்னைக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. இந்த காரை ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு, பேட்டரியை சார்ஜ் செய்தால், ஒரு கட்டத்தில் 900 கி.மீ., தூரம் வரை பயணிக்க முடியு ம். எனவே, ஒரு லிட்டர் பெட் ரோலுக்கு 100 கி.மீ., மைலேஜ் தரும் என்று டாடா மோட் டார்ஸ் நிறுவனம் அறிவித்து ள்ளது. ஜெனிவாவில் அறி முகப்படுத்தப்பட்டாலும், இந்த கார், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply