Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆசிய திரைப்பட விழாவில் விக்ரமின் … !

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படம், ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இரு க்கிறது. விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலா பா ல், குழந்தை சாரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி யான சூப்பர் ஹிட் படம் தெய் வத்திரு மகள். இந்தப்படம் ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் அதை மிக நேர்த்தி யாக எடுத்து இருந்தார் டைரக் டர் விஜய். அதிலும் குறிப்பாக விக்ரம் மற்றும் குழந்தை சாராவின் நடிப்பு ரொம்ப பிரமாதமாக வந்திருந்தது. அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஒசாகா ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக் கிறது.

இதுகுறித்து டைரக்டர் விஜய் கூறு கையில், ஒசாகா ஆசிய திரைப் பட விழாவில், உலக திரைப்பட பிரிவில் தெய்வத்திருமகள் படம் தேர்வாகி இருக்கிறது. மேலும் இப் படம் விருதுக்கான பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது. மார்ச் 15 ம் தேதி முதல் 18ம் தேதி வரை நட க்கும் இவ்விழாவில் பங்கேற்க நானும், விக்ரமும் செல்கிறோம். தெய்வத்திருமகள் படம் “காட்ஸ் ஓன் சைல்டு” எனும் பெயரில் ஆங்கில ‌சப் டைட்டிலுடன் திரையிடப்பட இருக்கிறது என்று கூறி யுள்ளார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply