Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவியுடன் மட்டுமே நடிக்க‍ ஆசைப்படும் வித்தியாசமான இயக்குநர் – பேட்டி

கொலிவுட்டில் ஜெயம்,சந்தோஷ் சுப்ரமணியம்,தில்லாலங்கடி போன்ற வெற்றிப் படங்க ளை ராஜா இயக்கியுள்ளார். 

கொலிவுட்டின் பிரபல இயக் குனர் ஜெயம் ராஜா, சென் னை நீலங் கரையில் உள்ள ஊடகம் மற்றும் கலை அறி வியல் கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந் தார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் ஜெயம் ராஜாவிடம் கேள்வி கேட்க, அவர் பதிலளித்தார்.

உங்கள் படங்கள் குடும்பம் பாணியை மட்டும் நம்பி உள்ளதே?

என்ன கதை என்பதை விட அதில் சொல்லப்படும் கருத்து முக்கி யம். உலக பொருளாதார பிரச்சி னையில் எல்லா நாடுகளும் பாதிக் கப்பட்ட போது நம் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை.

அதற்கு காரணம் நமது குடும்ப அமைப்பு தான், இந்த குடும்ப கூட்ட மைப்பு சேர்த்து வைக்கும் குணம் கொண்டது.

இப்படி சேர்த்து வைக்கும் பொறுப்பு தான் நம்மையெல்லாம் பிரி த்து போய்விடமால் இணைத்துப் பார்க் கிறது. அப்படிப்பட்ட குடும்பம், பாசம், விலக்கிவிட்டு படம் செய்வ து நல்லதா?

அடுத்தபட அறிவிப்பு தாமதமாகிறதே?

ஒரு வெற்றியைப் போலவே அதை தக்க வைப்பது முக்கியம் சிரம மும் கூட. இந்த அக்கறைதான் தாமதத்தின் காரணம் விரைவில் இரண்டொரு மாதத்தில் அடுத்த பட அறிவிப்பு வரும்.

விரும்பித்தான் இந்த தொ ழிலுக்கு வந்தீர்களா?

ஆமாம்,சினிமா குடும்பச் சூழலில் வளர்ந்தவன் நான். நான் வரக் கூடாதா? நான் விருப்பி பரிபூர்வமாக அடம் பிடித்து வீம்பு பிடித்து தான் இந்தத் துறைக்கு வந்தேன்.

உங்கள் கனவு படம் எது? எப் போது?

அடுத்தப்படம் எனக்குப் பிடித்த படமாக இருக்கும். ஒவ்வொரு படியாக ஏறவே ஆசை முதலில் பிடித்த கதை பிறகு கனவுப்படம்.

தமிழ் சினிமா நேற்று இன்று நாளை எப்படி?

மனித வாழ்க்கை நேற்று இன்று நாளை போலவே சினிமா இருக்கிறது. ஏனென் றால் சமுதாயத்தை பிரதிப லிப்பதுதான் சினிமா. முன் பெல்லாம் திரையில் படம் தெரிவதே ஆச்சரியமாக இரு க்கும்.

இன்று நிறைய படங்கள் பார் த்து சாதாரண பார்வையாளனே விமர்சகர் அளவுக்கு வளர்ந்திருக் கிறான். இந்த தலைமுறையைப் புரிந்து செய்ய வேண்டியிருக் கிறது.

நடிக்க வேண்டியிருந்தால் எந்த கதாநாயகியுடன் நடிக்க விரும்பு கிறீர்கள்?

என் மனைவி கூடத்தான்.

முதல்பட அனுபவம் சந்தோ ஷம் இன்றும் உள்ளதா?

எத்தனை படம் எடுத்தாலும் முதல்பட அனுபவம் மறக்க முடியாது. நான் முதலில்´ஹனுமான் ஜங்ஷன்´ என்கிற தெலுங்குப் படத்தை தான் இயக்கினேன்.

தியேட்டரில் போய்ப் பார்த்த போது தான் கீழே விழுந்து சிரிப்பதை பார்த்தேன். அவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தது.

தமிழில் முதல்படம்´ஜெயம்´அதுவும் தம்பி ரவியை ஹீரோவாக் கிய படம். உதயம் தியேட்டரில் தம்பியைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடியது. ஆரவாரம் செய்தது. ஒரே நாளில் நாயகனாகி விட்டான். அதை மறக்கவே முடியாது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply