ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப் பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மா ணவனும், மாணவியும், கல்லூரி வளாக த்திற்குள் மொபைல் போன் வைத்திருந் ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்ற னர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது.
ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்க ளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மா ணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண் டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென உத்தரவு பிற ப்பித்தது.
தனது உத்தரவில் சென்னை ஐகோர்ட் கூறியிருப்பதாவது: ஒரு நாகரீகமான மற்றும் முன்னேற்றமடைந்த சமூகத்தில், ஒரு மாண வனும், மாணவியும் சகஜமாக ப் பழகுவதை, ஒரு கல்வி நிறு வனம், குற்றமாகப் பார்க்க முடியாது. இதுபோன்ற அம்சங் களை குற்றமாக பார்க்க ஆரம் பித்தால், அது, மாணவ, மாண வியரின் அன்றாட செயல்பாடு களை பாதித்துவிடும்.
கல்வி நிறுவனங்களில் மொ பைல் போன் பயன்படுத்துவ தை ஒழுங்குபடுத்தும் வகையில், நெறிமுறைகள் வகுக்கப்பட வே ண்டும். ஆனால், வெறுமனே, மொபைல் போன் வைத்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும், அவர்களை நீக்கம் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.
கல்வி என்பது ஒவ்வொரு மாணவரின் அடிப்படை உரிமை. ஒரு தொழில்நுட்ப சாதனைத் தை வைத்திருந்தார்கள் என் பதற்காக, யாருக்கும் அந்த உரிமையை, யாரும் மறுக்க முடியாது.
அந்த 2 மாணவர்களும், தங் களது தரப்பு வாதத்தை எடு த்துரைக்க வாய்ப்பு தரப்பட வில்லை. கருத்தை கேட் காமலேயே தண்டனை வழங்கியது முதல் குற்றம். மேலும், அந்த கல்வி நிறுவனத்தின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கையா னது, சாதாரண மற்றும் இயற்கையான நீதியை மறுப்பதாகும்.
எனவே, அந்த மாணவர்களை உடனே கல்லூரியில் சேர்த்து, அவர் கள் தேர்வெழுதுவதற்கு பிரச்சினை ஏற்படாத வகையில், நீக்கம் செய்யப்பட்ட காலத்தையும் அவர்களின் வருகைப் பதிவாக கணக் கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் கூறியுள்ளது.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.