Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?

நீங்கள் டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தி ன் அளவு என்ன? நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களா ல் சராசரியாக டைப் செய்திட முடியும்.இல்லை, எனக்கு சுமா ராகத் தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்க ளைத் தெரிந்துகொள்ள வேண் டியது உள்ளது. எனக்கு எழுத்து க்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில் லை. எனக்கு கீ போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள். எப்படி இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக டைப் செய்திடும் திறன் உள்ளவர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் தங்களின் வேகத் திறனை அறிந்துகொள்ள ஓர் இணையம் உள்ளது.

இதன் முகவரி http://www.typeonline.co.uk/typingspeed.php இந்த தளம் சென்றால் இங்கு உங் களின் டைப்பிங் வேகம் தெரிந்து கொள்ள பாடம் தர ப்படும். முதலில் ஒரு டெக் ஸ்ட் இருக்கும். கீழாக அதே டெக்ஸ்ட்டினை டைப் செய் திட ஒரு கட்டம் தரப்பட்டிரு க்கும். மேலே உள்ள கட்டத் தில் டைப் வேகத்தைக் கண க்கிட டெக் ஸ்ட்டுடன் ஒரு கடிகாரத்திற்கான லிங்க் இருக்கும்.

தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் என இரண்டு லிங்க் இருக் கும். தொடங்கிவிட்டு நீங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடத் தொட ங்கலாம். முடித்தவுடனோ அல்லது இடையேயோ டைப்செய்வ தை நிறுத்திவிட்டு கடிகாரத்தையும் நிறுத்த வேண்டும். உடனே உங்கள் டைப்பிங் ஸ்பீட் என்னவென்று நிமிடத்திற்கு இத்தனை சொற்கள் என்று காட்டப்படும். மேலும் நீங்கள் டைப் செய்ததி ல் எந்த சொல்லில் எழுத்துப் பிழைகள் ஏற்படுத்தினீர்கள் என்றும் காட்டப்படும்.

இடதுபுறம் கீபோர்டு பழக, சொ ற்கள் மற்றும் எண்களைத் தனி த் தனியாகவும் இணைந்தும் டைப் செய்திட பழக என லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். கிளிக் செய்து தேவையான பாடங்களை எடுத்துப் பழகலாம். 

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: