Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ வல் யூ சொல்லு, மன நோயை வெல்லு

அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல் வலியும், மனவலியும் பற ந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார் ப்பதற்கே இப்படியா என நினை க்க வேண்டாம். அதேபோல் நேச த்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம் மன அழுத்தம் காணாமல் போய் விடும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் உறுதி செய் யப்பட்டு ள்ளது.

கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். “ஆ” என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கன வே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களி ன் படத்தை அந்தந்த பெண் ணிடம் கொடுத்தனர்.
 
தனது அன்புக்குரியவரை பார் த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றிய து. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என வியந்த ஆய் வாளர்கள் அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். அவர்களி டம் லேசாக அணை த்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அப்போது உடல் வலியும், மன அழுத்தமும் மறைந்து போனது கண் டறியப்பட்டது. அன்பிற்குரிய வர் அணைக்கும் போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப் படுத்தப்பட்டது கண்டறியப்ப ட்டது.
 
இதனையடுத்து கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போ ன்ற பிரச்சனைகளை அன்புக் குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நா ன்கு முறையாவது அணைத்துக் கொள் ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மாதத்திற்கு 2 முறையாவது கைகோர் த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.
 
இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக் கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேபோல் அமெரிக்காவில் மேற்கொ ள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் அன்பிற் குரியவரை சந்தித்து ஐ லவ் யூ கூற வை த்தனர். அப்போது அவர்களுக்கு காதல் உணர்வு அதிகரித்ததோடு மன அழுத்தம் பறந்து போனதாம்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply