Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபாகரன் குறித்த தகவலை, சேனல் 4 ஆதாரப்பூர்வமாக‌ வெளியிடாதது ஏன்?

இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப் பில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள சேனல்4  நிறுவனம், விடு தலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

பிரபாகரனின் மகன்  பாலச்சந்திர ன் எப்படிக் கொடூரமாகக் கொல்ல ப் பட்டான் என்ற காட்சிகள் சேனல் 4 -ன் புதிய வீடியோவில் உள்ளன. பிரபாகரன் குறித்தும் பரபரப்புக் காட்சிகள் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினு ம் அப்படி எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசு வெளியிட்ட வீடியோக் காட்சிகளை அடி ப்படையாகக் கொண்ட சில செய்திக ளைக் கூறியுள்ளது.  அவற்றி ல் பிரபாகரன் தொடர்பானவை அதி காரப்பூர்வமற்ற தகவல்கள் என்றே சேனல் 4 தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், இனப்படுகொலையை உலகறியச் செய்ய வெளியிடப்படும் வீடியோவில் பிரபாகரன் குறித்த காட்சிகள் இடம்பெறுவது எதற்காக  என்று சேனல் 4-க்கு கேள்வி எழுப்பி வந்தனர் தமிழ் அமைப்பினர்.

தலைவர் இருப்பு குறித்து காலம் முடிவு செய்யட்டும் என்று பெரு ம்பாலானவர்கள் முடிவெடுத்து காத்திருக்கும் நிலையில் சேனல் 4 அதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

எனவே பிரபாகரன் விஷயத்தில் எந்த ஒரு யூகத்துக்கும் இடம் தரா மல் செய்தியைத் தொகுத்துள் ளது சேனல் 4. பிரபாகரன் இருப்பு குறித்த தமிழர் நம்பி க்கை தமிழரிடையே அப்படி யே நீடிக்கிறது.

இனப்படுகொலை எந்த அளவு கோரத்தாண்டவம் ஆடியுள்ள து இந்த யுத்த பூமியில் என் பதை உலகறியச் செய்ய வே ண்டும் என்பது தான் இந்த வீடி யோவின் நோக்கம். இந்த இரண்டாவது ஆவணப் படத்தில் உள்ள பல காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. ஈவு இரக்கமற்ற கொடூர தொழில்முறை கொலைகாரர்கள்கூட இப்படி நடந்து கொ ள்ள மாட்டார்கள் என்ற உணர்வுதான் பார்த்த ஒவ்வொருவருக்கும் எழுந்தது.

இந்த ஆவணப்படத்தில் கேட்கப்பட்டுள்ளதைப் போலவே, உலக சமுதாயம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியைத்தான் நாமும் முன் வைக்கிறோம்.

– thanks to envazhi

Leave a Reply