Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிர வைத்த‍ ஆட்டோ சங்கரின் கடைசி சில நிமிடங்கள்


சரியாக, 20 வருடங்களுக்குப் பிறகு… ஒரு கொலைக் குற்றவாளி தூக்கிலிடப்படும் சம்பவத்தை

சந்தித்தது சேலம் மத்திய சிறைச்சாலை. ஏப்ரல் 27-ம் தேதி ஆட்டோ சங்கருக்குத் தூக்கு! விடியற் காலை 3 மணி இருக்கும். அந்த செல்லின் மூலையில் உட்கார்ந்த படியே அசந்துகிடந்த ஆட்டோ சங்கரை எழுப்பினர். உடனேயே எழுந்துவிட்ட சங்கர். ”போன் வரலியா இன்னும்?” என்று கேட்டான். இன்னும் 2 மணி நேரம் கழித்துத் தூக்கு மேடையில் நிற்கப் போகிற மரண தண்டனைக் கைதியான சங்கர், எப்படியும் தான் காப்பாற்றப்படுவோம் என்று அந்த நிமிடத்திலும் திடமாக நம்பிய துதான் ஆச்சர்யம்!”என் பேர் கௌரிசங்கர். ஆனா, அப்படி என் பேர் சொல்லிக் கேட்டா, யாருக்கும் தெரியாது…” ஏழு ஆண்டுகளுக்கு முன் கைதான போது, முதன் முதலாக ஜூ.வி. நிருபரிடம் அப்படித்தான் அவன் பேச ஆரம்பித்தான். 

ஆறு பேரைக் கொலை செய்ததாக இவனும் இவன் கூட்டாளிக ளும் சென்னை திருவான்மியூரில் கைதானபோது (ஜூலை  1988) நாடே நடுங்கியது!

இப்படிச் சொன்னால் போதும் வேறு எந்த அறிமுகமும் தேவை ப்படாது. ’80 -களின் கிரைம் ஹீரோ’ இவன்தான்!

”படிக்கிறப்பவே கஞ்சா, சாராயம் பழக் கமாயிடுச்சு வேலை தேடுனப்போ, வெள்ளையடிக்கற வேலை கிடைச்ச து. எனக்குச் சின்ன வயசிலேயே பணக்காரனா ஆகணும்னு ஆசை உண் டு. சொந்தமா ஒரு வீடு, கார் இப்படி..! வெள்ளையடிக்கிற வருமான த்துல இதெல்லாம் கிடைக்குமா என்ன?” என்று வாழ்க்கைத் தத்து வத்தை விளக்கிய சங்கருக்கு, வில்சன் என்ற சாராய வியாபாரி பழக்கமானான். அதே வியாபாரமும் பழக்கமாயிற்று. பணம் புரண் டது. பெண் சுகம், கேட்டது, நினைத்தது எல்லாம் கிடைத்தன.

போட்டி வியாபாரம் தொடங்கினான் சங்கர். பிரச்னைகளைச் சரிக் கட்ட அதிகாரி களுக்கு பெண்களை ‘அனுப்பி’ வைத்தான். பிறகு, அதுவே தொழில் ஆயிற்று. ஒரு பக்கம் சாராயம்; இன்னொரு பக் கம் விபசாரம் என்று சங்கர் பிரபலமாக… பிரபலங்களுக்கோ சங்கர் தான் எல்லாமே.

சென்னைக்குள் வழிதவறி வலையில் சிக்குகிற இளம்பெண்களுக்கு ச் ‘சரணா லயமே’ சங்கர்தான். தொழில் ஆரம்பித்த முதல் வருட த்தில் மட்டுமே சம்பாதித்தது 30 லட்ச ரூபாய். சங்கர் வீட்டுக்கிரகப்பிரவேச த்துக்கு பெருமளவு விருந்தாளிகள் போலீஸ் அதிகாரிகளே!  சங்கரின் மற்ற வாடிக்கையாளர்கள்… தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயி த்துக்கொண்டு இருந்த அரசியல் பெருந்தலைகளும் அதிகாரிகளு ம்தான்! சங்கர் ‘எதற்கும் உபயோகமாக இருக்கட்டுமே…’ என்று அவ்வ ப்போது செய்துவந்த ‘அந்தக் காரியம்’தான் பலரது தூக்க த்தைக் கெடு த்தது. எந்த வி.ஐ.பி-க்குப் பெண்களை அனுப்பினாலும், நடக்கிற ‘விஷயங்களை’ அப்படியே மறைவாக இருந்து புகைப்படம் எடுப்பது, முடிந்தால் முழு நீள வீடியோ எடுப்பது சங்கரின் பொழுது போக்காக இருந்தது.சாவகாசமாக அந்த ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நாசூ க்காகத் தெரிவித்து, நடுநடுங்கிப் போகிறவர்களிடம் நிறைய சாதித்துக் கொண்டான். இடைப்பட்ட நேரங்களில் 6 கொலைகள். அப்படிக் கொலையான சம்பத் என்பவரின் மனைவி விஜயா, ‘தன் கணவனைக் காணவி ல்லை’ என்று போலீஸிடம் புகார் கொடுத் ததும், ஜூ.வி. அலுவலகம் வந்து கதறி அழுததும்… நாம் விசாரணையை ஆரம்பிக்க, தோண்டத் தோண்ட பிணங்கள் வந்த தும்… பிறகு பிரபலங்களைப் பற்றிய நாறடிக்கும் உண்மைகள் வந்ததும் நாடறியும்!

ஆட்டோ சங்கர் அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்ட பெருமை வேறு எந்த கிரிமினலுக்கும் இல்லை. இவனை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா கூட வந்த து.

இந்த வழக்கில் மேலும் ஐந்து பேர் கைதாக… தொடர்ந்து, செங்கல்ப ட்டு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்தது வழக்கு. அரசியல், அதிகார வர்க்கம் புகுந்து விளையாடி யதன் விளைவு… சங்கர் நிராதர வாக நின்றான்.

ஒட்டு மொத்தக் குற்றவாளிகளில் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி மூவருக்குத் தூக்குத் தண்டனையும் மற்ற 5 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்துத் தீர்ப்பானது.

உயர்நீதிமன்ற அப்பீலில் ஆயுள் தண்டனையில் இருந்து இரண்டு பேர் மட்டும் விடு தலை ஆனார்கள். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆட்டோ சங்கர், எல்டின் இருவ ருக்கும் தூக்குத் தண்டனை விதித் ததை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்.

தற்கிடையில், சென்னை சிறை ச்சாலையில் இருந்த ஆட்டோ சங்கர் தன் சகாக்களுடன் ஒரு நாள் தப்பித்துப் போனான். மறு படியும் போலீஸாரிடம் சிக்கினான். ஆனால், இந்த எஸ்கேப் ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும்… சங்கர் வசம் இருந்த சில வி.ஐ.பி. ஆதாரங்களைக் கைப்பற்றி அழிப்பதற்காக நடந்தேறிய முயற்சி அது என்றும் சொல்லப்படுவது உண்டு.

பின்னர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டான் சங்கர். கிறிஸ்துவ மதத்துக்கு மாறி னான். அவனது குடும்பம் உதவுவதற்கு யாருமின்றிக் கெட்டு அழிந்தது. சங்கரும் எல்டினும் அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சங்கரின் மனைவியும் எல்டினின் மனைவியும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார்கள். அது நிராகரிக்க ப்பட, அப்பீலுக்குப் போனா ர்கள். பலன் இல்லை.

ஏப்ரல் 27-ம் தேதி சங்கருக்குத் தூக்கு தண்டனை என்று உறுதி செய்யப்பட்டது. முதல் நாள் நள்ளிரவுவரைக்கும் அதை ரத்து செய்யப் பல விதமான முயற்சிகள் நடந்தன.

மரண நாள் பற்றிய செய்தி வந்ததுமே சங்கர் நிறைய மாறினான் என்கிறார்கள். ஒழுங்காகச் சாப்பாடுகூட எடுத்துக்கொள்ளாமல் , பால் மட்டுமே எடுத்துக்கொண்டானாம். சவரம்செய்யாமல் தாடி மண்டிய முகத்துடன் திரிந்த சங் கரின் கவலை எல்லாம் அவனது மூத்த மகள் பற்றியதுதான்!

கீதாலட்சுமி என்ற அந்தப் பெண்ணுக்கு ஒரு பையனுடன் இருந்த காதல் விவ காரம் வீட்டுக்குத் தெரிய வர, ஏக ரகளை நடந்திருக்கிறது. அது ‘மைனர் பெண்’ என்று காரணம் சொல்லி போலீஸ் வரை புகார் போக, இப்போது அந்தப் பெண் சென்னையில் ‘சிறுவர் சீர்திருத்தப் பள்ளி’யில் இருக்கிறாள். அந்தப் பெண்ணி ன் எதிர்காலம் பற்றித் தான் சங்கர் கவலையோடு இருந்தான்.

”ஆனது ஆச்சு… அது என்னன்னு பார்த்து நல்லபடியா முடிச்சிடறது தான் எல்லோரு க்கும் நல்லது…” என்று தன்னைச் சிறையில் சந்திக்க வருகிற உறவினர்களிடம் சொன்னானாம் சங்கர்.

ப்ரல் 27, வியாழக்கிழமை. அதி காலை 4 மணி…

சேலம் மத்திய சிறைச்சாலைப் பகுதி முழுக்க அந்த உச்சகட்ட க்ளை மாக்ஸ் காட்சிக்குத் தன் னைத் தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தது. சுற்று வட்டார மக்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்கா ரர்கள் எனப் பெரும் பட்டாளம் மத்திய சிறைச் சாலையின் வாசலில் கூட… பரபரப்பு.

இதனிடையே, ஜெயிலுக்கு உள்ளே அந்த வேளையிலும் தன் மக ளுக்கும் மனைவி க்கும் நீண்டதொரு கடிதத்தை மிக சீரியஸாக எழுதி முடித்தான் சங்கர். கடைசி நிமிடங்களில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்களில் பதற்றம் துளியும் இல்லாமல் தெளி வான கையெழு த்தில் சங்கர் எழுதி இருந்தது அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தி யது.

அந்தக் கடிதங்களில் தனது சொத்துகள் குறித்த சில முக்கிய யோசனைகளைத் தன் குடும்ப த்தினருக்குத் தெளிவாக விளக் கி இருந்தானாம். தனது மரண த்துக்குப் பிறகு தனது சொத்து கள் கையாளப்பட வேண்டிய வழி முறைகளே அவை.

சற்று நேரத்தில், ‘காஷூவலாக’ மரண மேடையை நோக்கி நடந் தான் சங்கர். அப்போது, அங்கே இருந்த சிறை ஊழியர்கள் மளமள வென ஆக வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

கறுப்புத் துணியால் சங்கரின் சலனமற்ற முகம் மூடப்பட்டபோது, மணி காலை 5.30. சற்று நேரத்தில் ஆட்டோ சங்கர் கழுத்தைத் தூக்குக் கயிறு சுற்றி வளைத்தது. அடுத்த சில நிமிடங்கள்வரை தூக்குக் கயிற்றுடன் நடந்த மரணப் போராட்டத்தில் தோல்விய டைந்த சங்கரின் உடலைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘முடிஞ்சு போ ச்சு’ என்று கூறியவுடன், அந்தக் கண நேரங்களுக்கு ‘சம்பிர தாய’ சாட்சிகளாக நின்ற தாசில்தார், ஜெயில் சூபரின்டெண்டென்ட் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சிலரின் கண்கள் பனித்தன.


 

ஜெயிலுக்கு வெளியே உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆட்டோ சங்கரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறித்துடித்த காட்சி பரிதாபமானது. ஆட்டோ சங்கரின் சகோதரிகள் இருவரும், மகன்களான டெல்லி சுந்தரமும் சீனிவாசனும், கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்தனர்.நேரம் ஆக ஆக, பதற்றம் அதிகரித்தது. தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் உடலை அவனது உறவினர்களிடம் ஒப்படை ப்பதில் பெரும் குழப்பம் நிலவியது. காரணம், ஆட்டோ சங்கரின் மனைவி ஜெகதீஸ்வரி அங்கு வந்து சேரவில்லை. 6.25 மணிக்குத் தன் இளைய மகளுடன் ஆட்டோவில் வந்து இறங்கினார் ஜெகதீஸ்வரி. அதுவரை சற்று அமைதியாக இருந்த சங்கரின் தாயார், மீண்டும் புலம்பலை ஆரம்பித்தா ர்.”8கொலை, 10 கொலை செய்தவங்களையெல்லாம் வெளியே விட்ட பாவிகளா… என் பையனை இப்படி அநி யாயமா சதி பண்ணிக் கொன்னுட்டீங்களே… நீங்க உருப்படுவீங் களா?” என போலீஸாரைப் பார்த்து அர்ச்சிக்க ஆரம்பித்தார்.

கடந்த திங்கட்கிழமை ஆட்டோ சங்கரின் 39-வது பிறந்த நாளாம். அன்று அவனைச் சிறையில் பார்க்கச் சென்றிருந்தாராம். ”தைரிய மா இருங்க… கடவுள் நம்மைக் கை விட மாட்டார். இனிமே கடவுள் தான் நமக்கு எல்லாமே… எனக்காக எல்லா கடவு ள்கிட்டேயும் வே ண்டிக்குங்க!” எனக் கூறிய சங்கர்… தாயார் கொண்டு வந்த காபி யைக் குடித்து, அவரிடம் ஆசி பெற்றதை நினைவுபடுத்திப்  புலம் பிக் கொண்டேயி ருந்தார் அந்தத் தாய்.

”நேற்றிரவு முழுக்கத் தூங்காமல், தூக் கலிடப்படும் அந்த மரண விநாடிகளில் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் சங்கர் மன தைரியத்துடன் இருந்தது கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுப் போனோம்!” என்றார்கள் அதிகாரிகள் சிலர்.

‘கடைசி நிமிடம்வரை தூக்குத் தண்ட னையில் இருந்து தப்பி விடு வோம்’ என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தான் சங்கர். தன்னைக் காப்பாற்ற வெளியே நடக்கிற முயற்சிகளைப் பற்றித்தெரிந்து வைத்திரு ந்தான். 26ம்தேதி இரவு உறக்கம் இல்லாமல் விழித்து இருந்தான். ”எனக்கு ஒண்ணு ம் ஆவாது சார்… போன் வரும், பாருங்க…” என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.

அதிகாலை 3 மணிக்குக் குளியலுக்கு சங்கரை போலீஸார் அழைத்து சென்றபோது, ”என்ன சார், சுடுதண்ணி…! பச்சைத்தண்ணிதான் நல்லா இருக்கும்…” என்றபடி குளி த்து முடித்துவிட்டு வந்தான். ஆடைகளை அணிந்து கொண்டு வரும்போதும் ”போன் வரும் சார்…” என்று சொன்னான். கடைசியில் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்கி ற வழியில், ”எதுனா சொல்லணுமா சங்கர்..?” என்று அதிகாரிகள் கேட்க, ”ஒண்ணு மில்லே சார்…” என்ற சங்கர் ஆழமாக மூச்சை இழுத்து விட்டபடி, ”எனக்கு எந்த வரு த்தமும் இல்லே…” என்றானாம்.  தூக்குமேடைக்கு அருகே பைபிள் படிக்கச்சொ ல்லி மௌனமாகக் கேட்டுவிட்டு, அங்கேஇருந்த அதிகாரிகளிடம் ‘நான் வரட்டுமா .?’ என்பது மாதிரி தலையை அசைத்துவிட்டுத் தூக்கு மேடையில் ஏறி நின்றான். சங்கரின் முகத்தில் கறு ப்புத் துணி மாட்டப்பட்டது. கரங்கள் இரண்டும் பின்பு றமாக இழுத்துக் கட்டப்பட்டன. எல்லாம் முடிந்து சிக்னலுக்காகக் காத்திருந்த நேரத்தில் திடீரென, ” சார், ஒரு நிமிஷம் சார்… ஒரு நிமிஷம் சார்…” என்று கத்தினானாம் சங்கர். ஆனால், சட்ட விதி முறைகள் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்க இடம் கொடுக்கவி ல்லை. அடுத்த சில நிமிடங்களில் சங்கர் இறந்து போயிருந்தான்.

அந்தக் கடைசி நிமிடத்தில் சங்கர் என்ன சொல்ல நினைத்தானோ? சொல்லப் போனால்… இந்த வழக்கில் பல குரூரமான – உறைய வைக்கிற உண்மைகளும் கூடச் சொல்லப்படாமலேதானே போய் விட்டன!

நன்றி :

ஜூனியர்விகடன்-19-06-2011

உண்மைத் தமிழன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: