Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகான உடம்புக்குச் சொந்தக்காரி நான் – நடிகை ஷிகா

தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘விண்மீன்கள்’ படத்தின் கதா நாயகி ஷிகா முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங் கேற்றமும் நடத்தியவர். மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டமும் பெற்றி ருக்கும் பெங்களூர் அழகி யான ஷிகா தனது அனுபவ ங்களைப் பகிர்ந்து கொள்கி றார்.
திரைப்படத்துறையில் தங்களது அறிமுகம்..?
 
இயக்குனர் யோக் ராஜ் இயக்கத்தில் உருவான காலிபட்டா (Gali patta) என்னும் கன்னட படத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமா னேன். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுடன் அதில் வரும் ‘நதீம் தீம் தானா’ என்கிற பாடலும் மிக வும் பிரபலமடைந்த்து. அதே பாடலில் நான் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது… தொடர்ந்து வாரேவா, மயதானத மலே, காகன சுக்கி ஆகிய கன்னடப் படங்களின் நடித்தேன். 
 
தமிழுக்கு எப்படி வந்தீர்கள்…?
 
இயக்குனர் மதுமிதாவின் கொலகொல யா முந்திரிக்காவில் படத்தில் நான் அறி முகமானேன். அதன் பிறகு இன்று விண் மீன்களில் ஒரு அழுத்தமான கதாபாத்திர த்தில் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்தி ப்பதில் மகிழ்ச்சி.. விண்மீன்களில் அம்மாவாக நடித்திருக்கிறீ ர்களே..? ஆம், அந்தப் படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் மேனன் என்னிடம் சொல்லியபோது எனது கதாபாத்திரத்தின் முக் கியத்துவம் உணர்ந்து நான்  நடிக்க ஒத்துக் கொண்டேன்.  நல்ல ஆரோக்கியமான குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் வீசி விடும் சமூகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அதன் பெற் றோர் எவ்வளவு சிரத்தை எடுத்துப் பராமரிக்கின்றனர்.
 
அப்படிப்பட்ட ஒரு அம்மாவாக நான் நடித்ததில் எனக்குப் பெருமை யே… செரிப்ரல் பால்ஸி (Cerebral palsy) என்னும் ஒருவகைக் குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு மூளையைத் தவி ர கிட்டத்தட்ட மற்ற பாகங்களின் இயக் கம் துண்டிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட பாதி இறந்த மாதிரிதான். இருந்தும் அந் தக் குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டி சமுதாயத்தில் மிகவும் நல்ல நிலைமை க்கு வளர்த்தெடுக்கும் அம்மா வேடம். அதற்காக காட்டன் புடவைகளையே கட்டி நடித்தேன்… மூன்றில் ஒரு பங்கு எடை யையும் கூட்டினேன்.   எனக்கு அந்த அம் மா கதாபாத்திரம் ஒரு பரிசோதனை முய ற்சியாகவே இருந்தது… அந்தப் பரீட்சை யில் ரசிகர்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக் கை இருக்கிறது..  
 
தமிழுக்கு வருவதற்கு முன் தமிழ் தெரியுமா..?
 
இல்லை… சுத்தமாகத் தெரியாது…. கொல கொலயா முந்திரிக்கா வில் ஒப்பந்தமானவுடனே நானாகவே தமிழ் கற்கத் தொடங்கினே ன்… வசனங்களைப் புரிந்து சரி யான முகபாவனைகள் வெளிப் படுத்தத் தேவையான அளவிற் குத் தமிழைக் கற்றுக் கொண்டே ன்… தமிழ் ஒரு அற்புதமான மொ ழி, இன்னும் கற்றுக் கொண்டிருக் கி றேன்…  
 
தற்பொழுது நடித்துக் கொண்டிரு க்கும் படங்களைப் பற்றி..?
 
ஏ.எம்.ஆர்.இயக்கத்தில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளி லும் தயாராகும் வனயுத்தம் படத்தில்  சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பனின் நண்பனான குருநாத்தின் காதலி சாந்தினியாக நடிக் கிறேன்… அது ஒரு காட்டுவாசிப்பெண் வேடம்.. முழுக்க முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டி ருக்கிறது… மேக் அப் இன் றி காடு மலை என்று மிகவும் சிரத்தையெடுத்து நடிக் கிறேன்…  துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டே நடக்க வேண்டும்… நிச்சயம் இந்தப் படம் எனக்கு மேலும் நல்ல பெய ரை வாங்கித்தரும்…   படம் பார்த்துக் கதை சொல் என்னும் படத்தில் கன்னி யாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிக ளுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கும் போட் டோகிராபார் வேடம் ஏற்று நடிக் கிறேன்… முதல் கட்டப் படப்பிடிப்பு கன் னியாகுமரியில் நடந்தது… எனக்கோ கேமராவைச் சரியாகப் பிடிக்கவே தெரி யாது அந்தப் படத்தின் கேமரா மேன்தான் எனக்குச் சொல்லிக் கொ டுத்து நடிக்க வைத்தார்…. தருண் சத்ரியாவின் காதலியாக நடிக்கும் படம் பார்த்துக் கதை சொல் ஒரு ஆக்‌ஷன் படம்…  
 
எந்தமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை..?
 
எனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எந்த வித மான வேடங்களையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறேன்… 
 
விண்மீன்களில் புடவை கட்டி வந்த நீங்கள் சினேகா போல இருப் பதாகச் சொல்கிறார்கள்.. அவருக்கு விரைவில் திருமணம் நடை பெறவு ள்ள நிலையில் நீங்கள் அவரது இடத்தைப் பிடிப் பீர்களா..?
 
நான் அடிப்படையில் சுஹாசினி, ரேவதியின் மிக ப்பெரிய ரசிகை …சினேகாவின் ஒரு சில படங்களைப் பார்த்திரு க்கிறேன்… என்னி டமும் பலர்  சினேகாவைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள்… அதில் எனக்குப் பெருமை… எனக்கு மிகவும் மரி யாதை கிடைத் ததைப் போல் உணர்கிறேன்… அதேசமயம் அவரது இடத்தைப் பிடிப்பேன் என் றெல்லாம் சொல்ல முடியா து… 
 
தங்களது அழகின் ரகசியம்..?
 
சிந்தனையைத் தெளிவாக வைத்துக் கொள்வதற்கு நல் ல புத்த கங்கள் படிப்பேன்… எல்லா நல்ல படங்களையும் விடாமல் பார்த்து விடுவேன்..  மற்றபடி எனது நடனப்பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் என்னை அழகான உடம்புக்குச் சொந்தக்கா ரியாக வைத்திருக்கி ன்றன.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: