Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இந்த‌” குமுறல்கள் உங்களது குழந்தைகளிடமும் இருக்க‍லாம்

சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு… உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்… இதை யெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வை த்துவிட்டால் போதும்… குழ ந்தைகளை நாம் நல்ல படி யாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட் கொ ண்டுவிடுகிறது. ஆனால்…
 
அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி… என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன?

அம்மா, அப்பாவிடம் குழந்தைகள் என்னென்ன எதிர்பார்க்கிறார் கள்?

ஸ்கூலில் டீச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறா ர்கள்?

அம்மா, அப்பா, டீச்சர் பற்றியெல் லாம் அவர்களுடைய மனதில் படி ந்திருக்கும் அபிப்பிராயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன?’

இப்படிப்பட்ட கேள்விகளை எப்போதாவது அவர்களிடம் எழுப்பி யிருக்கிறோமா என்று கேட்டால்… பெரும்பாலான பெற்றோரின் பதில்… ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கிறது இங்கு!

ஆனால், இனியும்கூட இத் தகைய கேள்விகளை எழு ப்பி நாம் விடை காணா விட்டால், நாளைய தலை முறையைப் பற்றிய நம்மு டைய நம்பிக்கைகள் அனை த்துமே தூள் தூளாகிவிடும் என்று எச்சரிக்கிறது… பிஞ் சுக் குழந்தைகளிடம் ‘ நடத் திய ஸ்பெஷல் சர்வே!

சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்கள்; பழனி, கரூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி, உசில ம்பட்டி போன்ற நகரங்கள்; மண்மாரி, கீழ்நாச்சிப்பட்டு, வில்லி சேரி, தொட்டப்பநாயக்கனூர், சாமிநாதபுரம் போன்ற சிற்றூர்கள்… இங்கெல்லாம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகு ப்பு படிக்கும் 2,673 மாணவர்களிடம் இந் த சர்வே நடத் தப்பட்டது. ஆங்கிலம் மற் றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான 11 கேள்விகள் அடங்கிய தா ளைக் கொடுத்து, அவற்றைப் படித்துச் சொல்லி ‘அப்ஜெக்டிவ்’ டைப்பில் அதை பூர்த்தி செய்ய வைத்தோம். சர்வே பேப் பரை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டு வராமல், குழந்தைகளிடம் நெஞ்சுக்கு நெருக்கமாக பேசிப்பேசி… பற்பல தகவ ல்களையும் பெற்று வந்துள்ளனர் இப் பணியை முன்னின்று செய்த… விகடன் மாணவ பத்திரிகையாளர்கள். குழந்தைகளின் மனதை முழுமை யாகப் புரிந்துகொள்ள, தாய்மை நிரம்பிய அக்கறையுடன் அந்த முடிவுகள் இங்கே தொகுக்கப் பட்டுஉள்ளன.

எல்லாக் குழந்தைகளும்… அம்மா மீது அதீதப் பாசத்துடனும் அன்பு டனும் இருப்பதால், ”அம்மாவை மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லியுள்ளன. ஆனால், அம்மாவின் வகைவகையா ன சமையலும், வாங்கிக் கொடுக்கும் பொம்மைக ளும்… அவர்களுக்கு இரண் டாம்பட்சம்தான். மாநகரம், நகரம், சிற்றூர் என எந்தக் குழந்தைகளும் இதில் வேறு படவில்லை.

குழந்தைகள் அப்பாவிடம் அதிக அன்பை எதிர்பார்க்கின்றன என் பது தெளிவாகவே தெரிகிறது. ‘அப்பா அவ்வப்போது பார்க், பீச், சினிமா, கோயில் என்று எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பதை பெரும்பாலும் வலியுறுத்தியிருக்கின்றன குழந்தைகள்.

‘அப்பாவிடம் பிடிக்காத விஷயம் ..?’ என்ற கேள்விக்கு ‘அம்மாவி டம் சண்டை போடுவது’, ‘அம்மா வைத் திட்டுவது’, ‘சிகரெட், குடி என்று அப்பாவிடம் இருக்கும் தவறான பழக்க வழக்கங்கள்’ என்று பெரும்பாலான குழந்தை கள் பட்டியலிட்டிருக்கின்றன.

இந்த சர்வே முடிவுகளையெல் லாம் எடுத்து வைத்து, ”குழந்தை களின் இந்த எதிர்பார்ப்புகள் எல் லாம் எதனை உணர்த்துகின்றன?” என்று மனநல ஆலோசகர் டாக் டர் ராஜ்மோகன் மற்றும் குழந்தை கள் மனநல மருத்துவர் ஜெயந் தினி ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பியபோது… அவர்கள் தந்த பதில்கள்…

”வேலைப்பளு, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சமூக நிர்ப் பந்தம் காரணமாக அப்பாக்கள் வே லை மற்றும் தொழில் சார்ந்து வீட்டு க்கு வெளியிலேயே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால்தான் இன்றைய தலைமுறைக் குழந்தைக ள், ‘வெளியே போகும்போதாவது அதிக நேரம் அப்பா நம்முடன் இருப் பார்’ என்கிற எதிர்பார்ப்பை வெளிப்ப டுத்தியிருக்கின்றன.

அதிக நேரத்தை குழந்தையுடன் செல விட முடியாத அப்பா, அதை ஈடு செய்கிறேன் பேர்வழி என்று நிறை ய பொம்மைகள் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ‘குவாலிட்டி’ நேரத்தை செலவிட முடியாவிட்டால், அதனை பொருளாகக் கொ டுத்து குழந்தையையும் பொருள் சார்ந்த வாழ்க்கைக்குள் இழு க்கிறார் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதைவிட, எப் படி செலவிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். வீட்டில் காலையில் ஒரு மணிநேரம் இருக்கிறீர்கள் என்றா ல்… அதில் குழந்தைக்கு என்று சிலநிமிடங்களை செலவிடுங்கள் என்கிற படிப்பினையைத் தான் சொ ல்கிறது, உங்கள் சர்வே முடிவுகள்” என்று அக்கறை யுடன் சொன்னார் ராஜ்மோகன்.

”இன்று பெரும்பான்மையான மத்தியதரக் குடும்பங்க ளில் வீட்டு லோன், டூ-வீலர் லோன், கார் லோன் என்று பலதரப்ப ட்ட லோன்களை வாங்கி வைத்துள்ளனர். அதையெல்லாம் அடைப் பதற்காக, எப்போதும் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டே இரு க்கிறார் அப்பா. இத்தகைய பொருளாதாரம் சார்ந்த சுமைகள் அதி கமிருப்பதால்… குடும்ப உறவுகளு க்குள் சிக்கல் இருக்கிறது என்ப தையும் இது காட்டுகிறது. மாறி வரும் கலாசார பொருளாதாரச் சூழலையும் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்வது போல் இருக் கிறது இந்த சர்வே முடிவுகள்” என்றார் ஜெயந்தினி.

”முதல் காரணம், பொருளாதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கார், வீடு என்று அதிகம் சம்பா திக்க ஓடும்போது… குழந்தை, மனைவி என நேரம் செலவிட முடி யாத சூழல் ஏற்படுகிறது. அது சண்டையாக வெடிக்கிறது. தேவைக் கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம்” என்று கூடுதல் விளக்கம் தந்தார் ராஜ்மோகன்.

‘அம்மாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?’ என்ற கேள்வி க்கு ‘வெளியில் விளையாட அனுமதிக்காததுதான்’ என் று சிற்றூர் குழந்தைகளும்… ‘டி.வி, வீடி யோ கேம்ஸ் போன்றவற்றை அனுமதிப் பது இல்லை’ என்று நகர்ப்புறக் குழந்தை களும் கூறியுள்ளன.

”விளையாட்டு என்பது, பெற்றோரைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அலட் சியமான விஷயம் ஆகிவிட்டது என்ப தையே இது காட்டுகிறது. நகர்ப்புறக் குழந்தைகள் டி.வி, வீடியோ கேம்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெளி யே சென்று விளையாடு வதற்கு இடம் இல்லாததாலும், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தைகளே இருப்ப தாலும் நகர்புறத்தில் வாழும் குழந்தைகள் மனதளவில் இப்படி தயாராகிவிடுகின்றன. ஆனால், சிற்றூர்களில் வாழும் குழந்தை க்கு வாய்ப்பு இருந்தும்… படிப்பு, பாதுகாப்பு போன்ற காரணங்களால் விளையாட அனுமதி கிடைப்பதில்லை. விளையாடும் குழந்தைக் குத்தான் உடல், மனம் வலிமையாக இருக்கும்; விளையாட்டு புத்தி சாலித்தனத்தையும் வளர்க் கும் என்பதை பெற்றோர் புரி ந்து கொள்ள வேண்டும்” என் கிறார் ஜெய ந்தினி.

டீச்சர்கள் நட்புடன் இருப்ப தையும், தாங்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவ தையுமே 80 சதவிகிதத்துக் கும் மேற்பட்ட குழந்தைகள் விரும்புகின்றன. தண்டனை தருவது, போர் அடிப்பது போல் பாடம் நடத்துவது ஆகியவற்றை பிடிக்காத விஷயங் களாகவும் குழந் தைகள் வரிசைப்படுத்தியுள்ளன.

”நட்புடன் சிரிக்கும் டீச்சரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அத்தகைய ஆசிரியர் நடத்தும் பாடத்தைத்தான் விரும்பிப் படிக்கின்றன குழந்தைகள். இதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்ட ம் இது. ஆசிரியருக்கு கிடைக் கும் தகவல்கள், இன்று தகவ ல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்கூட்டியே மாணவனுக்கும் கிடைத்துவி டுகிறது என்பதையும் ஆசிரி யர்கள் உணர வேண்டும்.

ஒரு விதை எப்படி வளர்கிறது என்பதை கையில் விதையை க் கொடுத்து, மண்ணில் போட்டு வளர், செம்மண்ணில் வைத்து வெயிலில் படும்படி வை என்றெல்லாம் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பதற்கும், ‘விதை வளர்வதற்கு சூரிய ஒளி, தண்ணீர், மண் வேண்டும்’ என்று வாசித்து மனப்பாடம் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்து கொ ள்ள வேண்டும்” என்றார் ஜெயந்தினி.

குழந்தைகளின் மனங்களைக் குடைந்து, உள்ளே குடிகொண்டிருக் கும் குமுறல்களை இங்கே கொட்டிவிட்டோம். தீர்வு காண வேண் டியது… பெற்றோரும்… ஆசிரியர்களும்தான்!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

Leave a Reply