ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் சின்ன வயது லத்திகாவாக நடித்த சிறுமி ருபி னா அலி. மும்பையில் சேரியில் வாழும் ஒரு சிறுமியே அப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதப்பட்டது. எனவே, நிஜத்தில் சேரியில் வாழ்ந்த ருபினா அலி அந்த பாத்திரத்திற்கு தேர்ந் தெடுக்கப்பட்டார்.
அப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ள, உலக அளவில் ருபினாவும் அறியப்பட் டார். அதன் பின்னர், ருபினா வாழ்ந்த சேரியில் தீப்பிடிக்க, ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறினார் ருபினா.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்குப் பிறகு ருபினா ஒப்பந்தமாகி யிருக்கும் படம் Lord Owen’s Lady. படத்தின் ஹீரோ ஆண்டனி ஹாப் கின்ஸ். இவர் ‘Silence of the lambs’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலக அளவில் ரசிகர்களி டையே வரவேற்பைப் பெற்றவர்.
Lord Owen’s Lady படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க இருக்கி றது. தற்போது 13 வயதாகும் ருபி னா, இப்படத்திற்கு 3 வாரங்களுக் கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் காட்சிகளி சிம்லாவில் படமாக்கப்பட இருக்கிறதாம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்