Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புளுடூத் 4 தொழில்நுட்பத் தகவல்கள்

வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம் (Bluetooth Technolo gy) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.

புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற் றத்திற்கு மிக அருமையான வசதியாக இருந்த து. இருப்பினும் பல்வேறு பிரச்னைக ளை சந்திக்க நேர்ந்தது.
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்க ளை இணைப்பதில் சிக்கல், கடவுச் சொல் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணை ப்பு அறுந்து போதல் மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட் பம் தீர்த்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் தகவல்களினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26 Mbps ஆக உள்ளது. இது வீடி யோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிக ளுக்கு மிகவும் உதவியது.
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலு ம் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பற்றரியுடன் இயங்கும் திறன் கொ ண்டதாக இருக்கும். இதனால் ட்ரெட்மில் போன்ற தனி நபர் உடல் நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
இதற்கு அடுத்ததாக என்.எப்.சி எனப்படும் அண்மைக்கள தகவ ல் பரிமாற்றம்(Near Field Communication) திறன் கொண் ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும். புளுடூத் 4 இந்த தொ ழில்நுட்பம் கொண்ட போன்களு டன் எளிதில் தகவல்களைப் பரி மாறிக் கொள்ள முடியும்.
மடிக்கணணி, கைபேசி மற்றும் Router போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும்.
இந்த தொழில் நுட்பத்திற்கேற் ப வடிவமைக்கப்படும் சாதனங் கள் அனைத்தும், புளுடூத் பதி ப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றை யும் கையாளும். புளுடூத் 4 ஏற் கனவே Motorola_Droid_ Razr _Maxx ஆகிய மொபைல் போ ன்களில் இணைக்கப்பட்டுள்ள து.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply