கேரளாவில் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களின் இ-மெயில்களை போலீசார் வேவு பார்த்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதற்கு முஸ்லீம் லீக் கட்சி தலைவர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விசார ணை நடத்த கேரள முதல் -மந்திரி உம்மன் சாண்டி உத்தர விட்டார். விசார ணையில் கேரள ஹை டெக் பிரிவில் பணியாற் றும் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ சலீம் என்பவர்தா ன் இந்த குழப்பங்களுக்கு காரணம் என தெரிய வந் தது.
அவர் முஸ்லீம் லீக் தலைவர்களின் இ-மெயில்களை வேவு பார்க்க உத்தரவிட்டு எஸ்.பி. எழுதியதாக ஒரு போலி கடிதத்தை தயார் செய்து பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ சலீம் சஸ்பெண்டு செய்யப் பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலி ஆவணம் தயாரித்தல், அரசு ரகசிய சட்ட மீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திரு வனந்தபுரம் கோர்ட்டு நீதிபதி அஷ்ரப் முன்னிலையில் பிஜூ சலீம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஏப்ரல் 1-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். அதன்பின் பிஜூ சலீம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
news in malaimalar
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்