Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தூக்க‍மின்மையும், அதற்கான தீர்வுகளும்

 

தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப் படுகிறது. இது வயதானவர்களி னிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சி னையாகும்.

நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்நோய் வெளி க் காட்டப்படலாம்…
 • படுக்கையில் கிடந்தாலும் நித்திரைக்கு செல்ல முடியாமை
 • அடிக்கடி நித்திரை குழம்புதல்
 • சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து விடல்
 • நித்திரை கொண்டாலும் திருப்தியான நித்திரையின்மை
இந்தப் பிரச்சினை வேறு விதமான நோய்களோடு கலந்து காண ப்படலாம். உதாரணமாக் மன நோய்கள் , நோவினை ஏற்படுத்தும் மருத்துவ நோய்கள் போன்றவை.
இவ்வாறு வேறு விதமான நோய்களோடு இறுபவர்க ளுக்கு இந்த நித்திரையின் மை பிரச்சினை ஏற்படுமா னால் இது வெறுமனே அந்த மன நோயாலோ அல்லது மற்றைய நோயினால் ஏற்ப டும் நித்திரையின்மை என்று விட்டு விடாமல், நித்திரை யின்மை தீர்க்கப்பட வேண் டிய பிரச்சினையாகும்.
 
இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்…
 • வயது முதிந்தவர்கள்
 • பெண்கள்
 • விவாகரத்துப் பெற்றவர்கள்
 • துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள்
 • புகைப் பிடிப்பவர்கள்
 • அதிகம் கோப்பி குடிப்பவர்கள்
 • அதிகம் மது அருந்துபவர்கள்
 • சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்கள்
இதற்கான தீர்வு :
 
முதலாவதாக இந்தப் பிரச்சினை வேறு நோய்களோடு சேர்ந்து அல்லது வேறு நோய்களினா ல் (மன நோய் உட்பட) ஏற் படுமானால் அந்தக் குறிப்பி ட்ட நோய்க்கு சரியான மருந் தளிக்கப்பட வேண்டும்.
 
அடுத்ததாக இந்தப் பிரச்சி னையால் பாதிக்கப்பட்டவர் கள் சரியான தூக்கப் பழக்கத் தை மேற்கொள்ள வேண்டும்
 
சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ளுவது எப்படி!?
 
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லுவதற்கும் எழும்புவதற்குமான நேரத் தை ஒழுங்காக வரையறுத்துக் கொள்ளுங்கள்
ஒழுங்கான உடற்பயிற்சி(இரவை அண்டிய நேரத்தில் தவிர்க்க வும்)
பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச்ச த்திலே இருக்கப் பழகுங்கள்( சூரிய ஒளி)
இரவிலே பிரகாசமான வெளிச்சத்தை தவிருங்கள்
நித்திரைக்குச் செல்லுவதற்கு முந்திய .. மணி நேரத்தில் அதிகம் கனமான சாப்பாடு களை தவிருங்கள்
தூங்கும் அறையை இருளாகவும், அமைதியாகவும், சுத்தமாகவும் வைத் திருங்கள்
புகை மற்றும் குடியை தவீர்த்து விடுங்கள்
நித்திரைக்கு முன் மனதை சாந்தப் படுத்தும் விடயங்களில் ஈடு படுங்கள்
 
மேற்சொன்ன வழிமுறைகளுக்கு அடுத்ததாக உங்கள் நித்திரை பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
மாற்றப்படவேண்டிய நித்திரைப் பழக்க பயிற்சி முறை :
 
படுக்கைக்கு சென்று சில நிமிடங்க ளில் தூங்கமுடியவில்லை என் றால் உடனேயே அறை விட்டு வெ ளியேறி, நித்திரை எண்ணத்தை விட்டு உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை செய்யுங்கள் (வாசித்தல் போன்ற வை)
இவ்வாறு உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் போது மீண் டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.
அவ்வாறு படுக்கைக்குச் சென்று மீண்டும் தூங்க முடியாவிட்டால் சில நிமிடங்களில் படுக்கையை விட்டு எழுந்து உங்களுக்கு பிடித்த வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள். படுக்கைக்கு சென்று சில நிமிடங்க ளிலே தூக்கம் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்யுங்கள்.
 
முக்கியமாக பகல் நேரத்தில் தூங்குவதை தவிருங்கள்.
 
இப்படியும் உங்களால இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண முடியாவிட்டால் வைத்தியரை நாடி மருந்துகளை உட்கொ ள்ள வேண்டு ம்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: