Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய ஐ-பேட் – சிறப்பம்சம்

சென்ற மார்ச் மாதம் 7 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், யெர் பா புயான மையத்தில் (Yerba Buena Center) தன் புதிய ஐ-பேட் டேப்ளட் பிசியினை ஆப்பிள் நிறு வனம் வெளியிட்டது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மார்ச் 16 அன்று பொதுமக்களுக்கு விற்ப னைக்கு வந்தது. இதற்குப் புதிய பெயர் எதனையும் தராமல் “புதிய – ஐபேட்’ என ஆப்பிள் பெயர் சூட்டியுள்ளது. ஐ-பேட்2 வெளியாகி, ஏறத் தாழ ஓராண்டு கழித்து இந்த புதிய ஐ-பேட் வெளியாகி உள்ளது.

இந்த ஐபேடின் அதி முக்கிய சிறப்பம்சம் என இதன் திரையினைக் கூறலாம். இதன் திரை குறுக்காக 9.7 அங்குலத்தில் அமைக்கப்பட் டுள்ளது. இந்த திரையின் தோற் றக் காட்சியை ‘ரெட்டினா டிஸ்பி ளே’ (Retina Display) என ஆப்பிள் அழைக்கிறது. இதன் ரெசல்யூசன் 2048×1536 பிக்ஸெல்கள். இத னால் 31 லட்சம் பிக்ஸெல்கள் கிடைக்கும். திரைத் தோற்றத்தி னை, எவ்வளவு நெருக்கமாக விரி த்துப் பார்த்தாலும், இதன் பிக் ஸெல்களைக் காண இயலாது. இதன் மூலம் நம்பமுடியாத அளவிற்குத் தெளிவான காட்சி கிடைக் கிறது. திரை ப்படமாக இருந்தாலும், கேம்ஸ் விளையாடினாலும், படத்தைப் பார்ப்பதாக இருந்தாலும், கிடைக்கும் தெளிவும் துல்லிய மும் நம் கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட வைக்கின்றன. ரெட்டினா டிஸ்பிளே கொண்ட முதல் டேப்ளட் பிசி இதுதான். அசூஸ் நிறுவன மும் இதனைப் பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் டேப்ளட் பிசி இன்னும் வெளிவரவில்லை. இந்த புதிய ஐ- பேடின் தடிமன் 9.4 மிமீ. எடை 635 கிராம். இதன் பரிமாணம் 241.2×185.7×9.4 மிமீ.

ஐபேட்2 சாதனத்தின் கேமரா அதிகம் சிறப்பில்லாமல் இருந்ததனால், இம்முறை புதிய ஐபேடில், இரண்டு கேமராக்கள் இணைக்கப்பட்டு ள்ளன. பின்புறமாக 5 எம்பி சென்சார் திறன் கொண்ட கேமரா கொ டுக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் ஐ.ஆர். பில் டர் இணைக்கப்பட்டுள் ளது. இதன் ஐந்து எலி மெண்ட் லென்ஸ் மற்று ம் லென்ஸ் விரிவெளி மூலம் 1084 பி வீடியோ பதிவு செய்திட முடிகிற து. கூடுதலாக ஆடியோ போகஸ், டேப் போகஸ் மற்றும் வீடியோ தரப்படுத்தல் ஆகியவற் றை மேற்கொள்ளலாம். முன்புறமாக விஜிஏ தன்மையுடன் கூடிய கேமரா ஒன்றும் உள்ளது. வீடியோ சேட்டிங் போன்ற செயல் களுக்கு இது உதவுகிறது.

நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத் 4 வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சாதனத்தின் அடுத்த சிறப்பு இதன் பேட்டரி. இதுவரை அதிகபட்ச மாக 6944 mAh திறன் கொண்ட பேட்டரியை ஆப்பிள் தந்தது. தற் போது தரப்படும் பேட்டரியின் திறன் 11,666 mAh ஆக உள்ளது. ஏறத் தாழ இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. வை-பி இணைப்பு, வீடி யோ காணல் செயல்பாட்டிலும் 10 மணி நேரம் தொடர்ந்து சக்தி தரக் கூடிய மின் பேட்டரியா க இது உள்ளது. மொ பைல் நெட்வொர்க்கில் இணைத்துப் பயன்படுத் தினாலும், 9 மணி நே ரம் தொடர்ந்து பயன்ப டுத்தலாம். இந்த பேட் டரி செல்களை இணை ப்பதன் மூலம் டேப்ளட் பிசியின் எடை பரவல் தடுமாற்றம் அடையாமல் நிலைப்படுத்தப்பட் டுள்ளது.

இதில் சிரி (Siri) தொழில் நுட்பம் இணைக்கப்படவில்லை. ஆனால், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, குறிப்புகள், நினைவுக் குறிப்புகள் ஆகிய வற்றை குரல் மூலம் அமைத்து டெக்ஸ்ட் அமைத்திடும் Voice Dictation வசதி தரப்பட்டுள்ளது.

இந்த புதிய ஐ-பேடின் செயல் திறன் வசதியும் வியக்கத்தக்க வகை யில் உள்ளது. இதில் குவாட் கோர் கிராபிக்ஸ் ப்ராசசர் மற்றும் A5X சிப் தரப்பட்டுள்ளது. இதன் கிரா பிக்ஸ் ப்ராசசர் சூப்பர் ஸ்டார் தரத்தி ற்கு உயர்த்தப்பட்டுள் ளது. இது NVIDIA Tegra 3 கிராபிக்ஸ் ப்ராசச ரைக் காட் டிலும் நான்கு பங்கு கூடுதலான திறனுடன் காட்சியைத் தரக்கூடிய து. இந்த இரண்டு திறன் வசதிகளும் இணைந்தே ரெட்டினா டிஸ்பி ளேயைச் சிறப்பாக அளிக்கின்றன. அத்துடன் ஐ-பேட் செயல்பாடுக ளை மிக எளிதாக இயங்க வைக்கின்றன. சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், வீடியோக்கள், கேம்ஸ் என எதுவாக இருந்தாலும் அவை எந்த சிக்கலும் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன.

ஐஒர்க், ஐமூவி மற்றும் காரேஜ் பேண்ட் என்ற அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன. புதியதாக, ஐ-பேட் சாதனத்தில் பயன்படுத்த, ஆப்பிள் நிறுவனம் ஐ-போட்டோ என்ற அப்ளிகேஷ னைத் தந்துள்ளது. சாதாரண லேப்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் பல திறன் கொண் ட வசதிகளை இதில் அளிக் கமுடியும் எனக் காட்டுவதற் காகவே இந்த அப்ளிகேஷன் களை ஆப்பிள் மேம்படுத்தித் தந்துள்ளது.

சாதாரண பயன்பாடுகளை மட்டும் மேற்கொண்டு ஐ-பேட் பயன்படுத்தி வரும் பழைய வாடிக்கை யாளர்களுக்கு, இந்த புதிய ஐ-பேட் மாற்றங்கள் அவ்வளவாகப் புல னாகாது. திரை ஒன்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் ஆச்சரியமான வேறுபாடாகத் தெரியும்.

இந்த புதிய ஐ-பேட் மூன்று வடிவமைப்புகளில் கிடைக்க இருக்கிறது. வை-பி மற்றும் கொண்டதாக, வை-பி மற்றும் 4ஜி இணைப்பு கொ ண்டதாக என இரண்டு வகைகளில் கிடைக்கும். இதன் கொள்ளள வில் மாற்றம் எதுவுமில்லை. ஐ-பேட்2 போலவே, இந்த இரண்டு வகைகளிலும், 16, 32 மற்றும் 64 ஜிபி கொள்ளளவுகள் கொண்டு மூன்று மாடல்கள் தரப்படும். அமெரிக்கா மற்றும் 25 ஐரோப்பிய நாடுகளில் இவை, மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் இணைப்புடன் இணைந்தே விற்பனை செய்யப் படுகின்றன.

இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் இவை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கும் மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் சேவை திட்டங்களுடனே இவை விற்பனை செய்யப் படலாம்.

இந்த புதிய ஐ-பேட் மூலம், 2012 ஆம் ஆண்டு டேப்ளட் பிசி விற் பனைச் சந்தையில் 70% பங்கினை ஆப்பிள் பெற்றுவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறு வனம் தன் ஆப்பிள் ஸ்டோர் மூல ம் வழங்கும் அப்ளிகேஷன் புரோ கிராம்களின் அடிப்படையில் விற் பனையை எதிர்பார்க்கிறது. ஐ- பேட் சாதனங்களுக்கு மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட அப்ளி கேஷன் புரோகிராம்கள் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கின்றன. புதிய ஐ-பேட் விற்பனைக்கு வந்த தனால், ஐ-பேட் 2 டேப்ளட் பிசியி ன் விலை, அனைத்து நாடுகளிலும், 100 டாலர் அள விற்குக் குறைக் கப்பட்டுள்ளது. டேப்ளட் பிசி விற்பனையில், ஆப்பிள் நிறுவனத்தி ற்கு போட்டியாக ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மாடல் கள் உள்ளன. இருப்பினும், முதல் இடத்தினை ஆப்பிள் நிறுவன த்தின் ஐ-பேட் டேப்ளட் பிசிக்களே இடம் பிடித்துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது. புதிய ஐபேட் அறிமுகமானவுடன், ஆப்பிள் நிறுவனத் தின் பங்கு விலை 43 சென்ட் உயர்ந்து, 530.69 டாலராக ஆனது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply