Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌ரணத்தை வரவழைக்கும் மாட்டிறைச்சி

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பன்றியின் இறை ச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச் சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிற து. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ண த்தை அளிக்கிறது.

பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச் சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சத விகிதம் பேர் இளம் வயதில் மரண மடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற் கொண்டதில் இது தெரிய வந்துள் ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்ற வை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண் களும் இந்த ஆய்விற்கு எ டுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவ ர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர் கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்று நோய் பாதிப்பு ஏற்பட காரண மாகின்றன என்றும் ஆய்வாள ர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ஹாட் டாக் எனப் படும் துரித உணவுகளை சாப் பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைது ம் கண்டறியப்பட்டது. அதே சமயம் மாட்டிறைச்சிக்கு பதி லாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண் ட நாட்கள் ஆரோ க்யத்துடன் இருந்தது தெரியவந்தது.

எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கி யத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறி வுறுத்தியுள்ளனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: