Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு ஏற்றதொரு அழகு பேஸ் மாஸ்க்

பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதி கம். அதிலும் மார்கெட்டிங் வே லைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியு டன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்து விடும். எனவே முக அழகை புத் துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலே யே பேஸ் மாஸ்க் போடுங்க ளேன்.

வெள்ளரிக்காய் மாஸ்க்

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாக வும், அழகுப் பொருளாகவும் பயன்படுகி றது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்க வும், முகத்திற்கு தேவையான எண்ணெ ய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத் து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழு வவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இரு க்கும். வெள்ளரிக் காயை தயிருடன் கலந் தும் மாஸ்க் போட லாம்.

தேன், முட்டை

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவை யற்ற அழுக்குகளை நீக்குகி றது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கல ந்து முகத்தில் அப்ளை செய் யலாம். 15 முதல் 20 நிமிட ம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர் ந்த நீரில் கழுவ முகம் புத்து ணர்ச்சியாகும்.

தக்காளி பழ மாஸ்க்

ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங் குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழ த்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத் திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

வேப்பிலை மாஸ்க்

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக் தி கொண்டது. எண்ணெய் பசை சரும த்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெது வெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை யில் அந்த இலையை மைய அரைத் துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட்போல செய்யவும். இந்த கலவையை முகத் தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செல வில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்தி ற்கு இரண்டு முறை உபயோகிக்கலா ம். வெயில் காலத் திற்கு ஏற்றது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: