Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குற்றவாளிகளை காயமின்றி சுட்டெறிக்கும் அதி நவீன ஆயுதம் – அமெரிக்கா கண்டுபிடிப்பு – வீடியோ

குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத் துபவர் களை தாக்குவது போன்ற செயல் களுக்காக அமெரிக்கா புதுவித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந் துள்ளது. இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும்.

ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. “ஆக்டிவ் டினை யல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர் வீச்சு ஆயுதத்தை அமெரிக்க இராணுவம் உரு வாக்கியுள்ளது.

 வர்ஜீனியா மாநிலம் குவான்டிகோ நகரில் உள்ள இராணுவ தளத் தில் 2 வாரம் முன்பு நடந்த நிகழ்  ச்சியில் மூத்த இராணுவ அதிகாரி களுக்கு இந்த ஆயுதம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட் டது.

இது செயல்பாடு குறித்து இராணு வ அதிகாரிகள் கூறியதாவது: மர ணம் ஏற்படுத்தாத வகையில் தாக் குதல் நடத்தும் ஆயுத ஆராய்ச்சி யில் அமெரிக்கா நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.

15 ஆண்டு முயற்சிக்கு பிறகு ஏடிஎஸ் ஆயுதம் உருவாக்கப்பட்டு ள்ளது. துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல, ஏ டிஎஸ் கருவியில் இருந்து மைக் ரோவேவ் ரேடியோ கதிர்வீச்சு வெளிப் படும்.

வீட்டு உபயோக பொருட்களில்(மைக்ரோவேவ் ஓவன்) இருக்கும் கதிர்வீச்சைவிட இது 100 மடங்கு வலுவாக இருக்கும்.

 சக்தி வாய்ந்த லென்ஸ் கருவி இதனுடன் இணைக்கப்பட்டுள் ளது. ஒரு கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரியைக்கூட துல் லியமாக குறி பார்த்து சுட முடி யும். கருவியில் இருந்து 95 ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அளவு க்கு கதிர்வீச்சு பாயும். சாதா ரண நிலையில் மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட். 2 வினாடிக்கு இந்த கதிர்வீச்சு உடலில் பாய்ந்தா லே 130 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பாயும். உடல் எரியும்.

அதிவேகத்தில் பாய்ந்து செல் லும் கதிர்வீச்சு எதிரியை தாக்குவ தால் உடல் முழுவதும் பற்றி யெரிவது போல எரிச்சல் ஏற்படும். எதிரி நிலை குலைந்து விடுவார். ஆனால் தோலில் மிக மிக சொற் பமான ஆழத்து க்கு(ஒரு இஞ்ச்சில் 64-ல் ஒரு பங்கு) மட்டுமே கதிர்வீச்சு இறங்கும் என்பதால் காயம் ஏற்படாது.

மனிதர்கள் மீது 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறை இந்த கதிர்வீச்சு பாய்ச்சி சோதனை செய்யப்பட்டது. அதில் 2 முறை மட்டுமே லேசான காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இது மிகவும் பாதுகாப் பானது. ஆப்கான் போரின் போது ஏடிஎஸ் ஆயுதம் கொண்டு செல்லப் பட்டது. ஆனால் ஒருமுறைகூட பயன்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply