உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக் கின்றன. சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட்மில் (Treadmill) போ ன் ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள். ஏரோ பிக்ஸ் பயிற்சிகளி ல், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக் கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தா ற் போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட் லிஃப் டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற் பயிற்சி செய்வார் கள். 18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
எனவே, இத்த கையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட் னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள் வது நல்லது!”
டி.முருகன், புதுக்கோட்டை.
”நான் போக்குவரத்துக் காவலராக ப் பணிபுரிகிறேன். வயது 38. பணி நிமித்தமாக நாள் முழுக்க நின்று கொண்டு இருக்க வேண்டிய சூழல். கால்களில் வலி இருக்கிறது. வெரிக்கோசிஸ் பாதிப்பாக இருக்கலா ம் என்று பயமுறுத்துகிறார்கள். வெரிக்கோசிஸ் யாருக்கெல்லாம் வரும்?”
‘பயப்பட வேண்டாம் நண்பரே…. இது சாதாரண கால் வலியாகக் கூட இருக்கலாம். பரிசோதனை செய் து பார்க்காமல், தீர்வு சொல்வது சரி யான வழிமுறையாக இருக்காது. என வே, முதலில் மருத்துவரைச்சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
வெரிக்கோசிஸ் பாதிப்பு என்பது கெட் ட ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச் னை. எனவே, இத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவர்களை நாடும் பொ ழுதுதான், உடனடியாக உரிய சிகிச் சை கிடைக்கும். பொதுவாகத் தொழி ல் நிமித்தம் அதிக நேரம் நின்று கொ ண்டு இருப்பவர்களுக்கு, வெரிக்கோசிஸ் தாக்குதல் அதிகமாக இருக்கு ம். சில ருக்கு மரபு ரீதியாகவும் இந்த நோய் வரலாம். ஒரே இடத் தில், அசை வுகள் இல்லாமல் நின்றுகொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண் டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்க்கும் அலுவலகச் சூழலில் அவ்வப்போ து கால்களின் நிலையை மாற்றிக் கொண்டு உட்காரப் பழகலாம்.”
ம.ராகுல், செருபாலக்காடு.
”என்னுடைய உள்ளங்கைகள் மற் றும் உள்ளங்கால்களில் எல்லா நே ரமும் வியர்த்துக்கொண்டே இருக் கிறது. எழுதும்போது பேப்பரே நனைந்துவிடும் அளவுக்கு வியர்க்கிறது. இதனால் எந்த வேலை யிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. வியர் வையை நிறுத்த ஏதேனும் வழி இருக்கிறதா டாக்டர்?”
”உள்ளங்கை மற்றும் உள்ளங் கால்களில் வியர்ப்பதற்கு மூன் று விதமான காரணங்கள் உள் ளன. ஒன்று, பிறப்பிலேயே ஒருவரின் உடல் அமைப்பு அப் படி அமைந்திருக்கலாம். இரண் டாவது, ‘ஹைபர் தைராய்டு’ எனப்படும் தைராய்டு அதிகமா கச் சுரந்தாலும் உள்ளங்கையும் உள்ளங்காலும் எந்த நேரமும் வியர்க்கும். மூன்றாவது, அள வுக்கு அதிகமான கவலை (Anxiety). குறிப்பாக, தேர்வு சமயத்தில் சிலருக்கு அதீதக் கவலை மற்றும் பதட்டத்தால் அளவுக்கு அதிக மாக வியர்த்து, தேர்வு எழுதும் பேப்பரே ஈரமாகி விடும். மற்றவர்க
ளுடன் கை குலுக்கக்கூட முடி யாது. இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. இயல்பாக வே இதுபோன்ற உடல் அமைப் பு கொண்டவர்கள், மருத்துவரி ன் ஆலோசனையின்பேரில் தினமும் இரவு படுக்கும் முன்பு உள்ளங்கை மற்றும் உள்ள ங்கால்களில் இந்த மருந்துக ளை த் தடவிக்கொண்டு படுக்க லாம். காலையில் எழுந்ததும் கை, கால்களை சோப்பு போட்டுக்கழு வ வேண்டும். இந்த மருந்துகள் ஓரளவு மட்டுமே நிவாரணம் தரும். இவற்றைப் பயன்படுத்தியும் வியர்வை கட்டுப்படாவிட்
டால், ‘அயன்டோபோரேசிஸ்’ (Iontophoresis) என் ற சிகிச்சையை மேற்கொள்ளலாம். உள்ளங் கை மற்றும் உள்ளங்கால்களில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி வியர்வை த் துளைகளை அடைப்பதுதான் இந்தச் சிகிச்சை. மொத்தம் 40 நிமிடங்கள் மேற் கொள்ளப்படும் இந்தச் சிகிச்சையைத் தின மும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் ஓரளவு வியர் வை குறைய ஆரம்பித்ததும், வாரத்துக்கு இரண்டு முறை மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்தச் சிகிச்சை எடுக்க
முடியாதவர்களுக்கு ‘போடோ க்ஸ்’ (Botox) என்ற மருந்து உள்ளது. இதை ஊசி மூலம் கையில் செலு த்த வேண்டும். ஒரு முறை இந்த ஊசிபோட்டால் சுமார் ஆறு மாதம் வரை வியர்வைத் தொந்தரவு இருக்காது. ஆனால், இதற்கான செலவு சற்று அதி கம். தைராய்டு, பதட்டம் மற்றும் கவலையால் இத் தொந்தரவுக்கு ஆளானவர்கள், முதலில் இப்பாதிப்புகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே, பிரச்னையைச் சரிசெய்து விடலாம்!’
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
naan puthenathga gym chenthu ulilen, enn yadi 85 nan ennth mathereyana uderpayeriche seya vendum