Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெற்றிப் பொட்டின் ரகசியமும் அதன் வகைகளும்

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமு ம் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத் தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்க ளுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர்.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற் றலுக்கும் சிந்திக்கும் திற னுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இர ண்டும் மின்காந்த அலைகளை வெளியி டுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும் போது, தலைவலி அதிகமாவதை உணரலாம்.

நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதை த் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோ ர்கள்.

இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களி ல் பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்க ரிக்கின்றன. நாம் வைக்கும் பொட் டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். என வே முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

நீளமான பொட்டு

வட்ட வடிவ முகம் இவர்கள் நீள மான பொட்டுகளை உபயோகிக்க வேண்டும். நீளமான பொட்டு இவர்க ளது உருண்டை முகத்தை சற்று நீள வாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களு க்கு மத்தியில் பொட்டு வைக்க வே ண்டும்.

இதய வடிவ முகம்

இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

ஓவல் வடிவ முகம்

ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவ த்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.

சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட் டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிக முள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ள லாம். உருண்டை மற்றும் முட்டை வடிவி லான பொட்டுகள் இவர்களுக்கு பொருத் தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடி வ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இரு க்கும்.

முக்கோணப் பொட்டுக்கள்

முக்கோண வடிவ முகம் உள்ளவர்களு க்கு அனேகமாக எல்லா வகைப் பொட்டு களும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக் கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக் கும். அகலமான நெற்றியாக இருந்தா ல், புருவத்தில் இருந்து ஒரு சென்டி மீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வே ண்டும்.

முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட் டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோது மை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்த மாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: