சில பேருக்கு புதிய பைக்கு வாங்க வேண்டுமென்று ஆசை இருக்கும்.
ஆன பட்ஜெட் இருக்காது. சில பேருக்கு பழைய பைக்க வாங்கி தங்கள் இஷ்டம் போல் சிறு
சிறு மாற்றங்கள் செய்து பயன் படுத்துவார்கள் .அதிலே இன்னு ம் பெரிய ஜாம்பவான்கள் ரூபா ய் 10,000/-க்கு பைக்க வாங்கி சுமார் 50,000/-, 70,000/- செலவு செய்யும் ஆசாமிகளையும் நாம் கண்டதுண்டு இப்படி செலவு செய் பவர்கள் முறையாக அரசு கட்டு பாடுகளை, நடைமு றைக ளை கடைபிடிக்கப்படுகிற த, அந்த வாகனம் எல்லாவற் றுக்கும் உட்ப டுத்தப்படுகிறதா என்றால் இல்லைதான்னு சொல் லனும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
வாகனங்களின் நீள, அகலத்தை மாற்றி, பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் ஓட்டுவது சட்ட ப்படி தவறு. அதாவது, தயாரிப்பாளர் வாகனத்தின் நீளம், அகலம், மற்றும் வடிவமைப்பினை புனே யில் உள்ள “ஆட்டோமேட்டிவ் ரிசர்ச் அசோஸியேஷன் ஆஃப் இந் தியா”வில் சமர்பித்து , அதன் அடிப்படையில்தான் சான்றிதழ் பெறுகிறார். அது பல்வேறு சோத னைகளுக்குப்பிறகு வழங்கப் படுகிறது.
வாகனத்தின் நிறத்தை மாற்றுவதாக இருந்தாலு ம், இன்ஜின் மற்றும் சேஸி யை மாற்றுவதாக இருந்தாலும் மாற்றப்பட் ட இன்ஜின் மற்றும் சேஸி நம்பரை மீண்டும் பதிவு செய்யவேண்டும்.
வீல்பேஸ், இன்ஜின் திறன் அதாவது சி,சி திறன், சிலிண்டர், எரி பொருள், சக்தி, எடை என எதை மாற்றுவதாக இருந்தா லும் அதை ஆர்.டி.ஓ (R.T.O) அலுவகத்திற்கு சென்று ஆர். சி (R.C) புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். இது இன் ஷீரன்ஸீக்கும் உதவியாக இருக்கும் !
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்