தமிழில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரு கிறார் தமன்னா. இந் நிலையில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படமொன் றில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் கால்ஷீட் குழப்பம் காரணமாக அப்படத்தி லிருந்து தமன்னா விலகிவிட்டார். அவ ருக்கு பதிலாக கன்னட நடிகை அக்ஷரா நடிக்கிறார் என்று டோலிவுட்டில் தகவல் வெளியானது.
இதற்கு தமன்னாவின் தந்தை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தமன்னா பற்றி சமீபகாலமாக வதந்திக ளை பரப்பி வருகிறார்கள். மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறுவ து தவறு. அந்தப்படத்தில் நடிப்பது உறுதி. ஆனால் மற்ற படங்களி ல் நடிப்பதால் கால்ஷீட் தருவதில் பேச்சுவார்த்தை நடந்து வருகி றது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் ஆகியோர் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது’ என்றார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்