Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் பெண்கள் – வீடியோ

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்! இதில் எந்த வித மான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் (இதுமாதிரி பெண் களுக்கு வக்காலத்து இக்கால அக்காள்கள் பார்ப்ப‍தற்காக‌ இந்த வீடியோவை தவிர்க்க‍ முடிய வில்லை.)

நமது இந்தியப் பெண்களின் நடை, உடை, பாவனைகளை கண்டு  நமது இந்தியர்கள் மட்டுமல்லாமல் அயல்நாட்டினரும் பாராட்டிய துடன், அது போலவே நமது இந்திய பெண்களை அவர்களும்து வாழ்க்கை முறையில் பின்பற்ற‍த் தொடங்கிய வரலாறு பல உண்டு. 

நமது இந்திய பெண்களில் சிலர் ஏனோ! வழிதடுமாறி, இதுபோன்ற ஆபாச களியாட்ட‍ங்களை ஈடுபட்டு, அவர்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த‍ பெண்ணினத் தையே இழிவுபடுத்துவது போல் உள்ள‍து.

ஆண்கள் ஓட்டும் கனரக வாகனத்தைகூட ஒரு  பெண் எளிதாக ஓட்டுகிறாள். ஆண்கள், திரைத்துறையில் இயக்குநர் பாடலாசிரியர் களாக‌ இருப்ப‍து போல் இப்போது பெண்களும் பாடலாசிரியர்களா கவும் இயக்குநர்களாகவும் உள்ள‍னர்.

அகில இந்திய அரசியலிலும் சரி, நமது தமிழ்நாட்டிலும் சரி ஆட்சியா ளர்களாக அதுவும் சக்தி வாய்ந்த பதவிகளில்  பெண்களே இருக்கி றார்கள்.

ஓர் ஆண், விண்வெளிக்கு சென்று வந்தால், நாங்களும் சளைத்த‍வர் கள் அல்ல‍ என்று பெண்களும் விண்வெளிக்கு சென்று திரும்புகி ன்றனர்.

இதுபோன்ற எத்தனையோ துறைகளில் ஆண்களுக்கு சமமாக ஏன் ஆண்களைவிட திறமையாகவும் பணியாற்றுகின்றனர். இதுபோன்ற ஆரோக்கியமான துறைகளில் பெண்கள் கவனம் செலுத்தி, தத்தமது வாழ்க்கையில் முன்னேறி, தனக்கும் தான் சார்ந்த சமுதாயத்திற்கும் நல்ல‍தொரு முன்ணுதாரணமாக திகழ்வதை விடுத்து, இதுபோன்ற களியாட்ட‍ங்களால் பெண்ணினத்தை இழிவுபடுத்தும் பெண்களை, விதை2விருட்சம் வன்மையாக கண்டிக்கிறது.

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: