Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் “தெர்மா மீட்ட‍ர் (வெப்ப‍ மானி)”

செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினா றாவது நூற்றாண்டு முடியு முன் இத்தாலிய வான் கணிப் பாளர்  (astronomel)  கலிலி யோவால் (Galileo)முதன் முதலாக உருவாக்கப்பெற்ற து. அது முதல் வளி வெப்ப மானியாய் (airther mometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகை யைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத் தினார்.
 
பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட் பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப் பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கே ற்ப அதன் கொள்கலனாகிய கண் ணாடியை விட விரைவாக விரிவ டைந்து அல்லது குறைந்து நின்று அளந்து காட்டித் தெரியப்படுத்துவ தாம்.

எனவே வண்ண ஒழுகுபொருள் குறு கலான இலேசான கண்ணாடிக் குழா ய்க்குள் அமைந்து, விரிவின் வேறு பாட்டை ஒழுகுபொருள் படிப்படியா ன எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும். ஏறுத்தாழ 1714 இல் ஜெர்மனிய அறிவி யலாளர் கேபிரியல் டேனியல் பேரன்ஹீட் (Gabriel Daniel Fahren heat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன் முத லா கப் பாதர சத்தை (Mer cury) அளக்கும் இயக்கியா கப் பயன்படுத்தினார்.

அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 பாகை யை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 பாகையை கொதிநிலை அளவாகவு ம் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாத ரசம் பெரும்பாலான வெப்ப மானிகளில் இன்றும் பயன்ப டுத்தப்படுகிறது. ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674பாகை ஆகவும் கீழ் உறை நிலை – 83 பாகை ஆகவும் இருப்பதாலேயே ஆகும்.

சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. ஏறத்தாழ 1731ம் ஆண்டில் ரேனேடே Rene de Reaumur என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டு பிடிக்கப் பட்ட ஒன்றாகும். அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவிடிஷ் வான் கணிப்பாளர் அண்டர்ஸ் செலி சியஸ் Anders Celsius) என்ப வர் நூற்றியல் அளவைக் கொ ண்ட நூற்றியல் வெப்பமானி யை முதலாவதாகப் பயன்படு த்தினார்.

மூளையில் பதிவான சோகத் தை இரப்பர் வைத்து அழிக்க லாம்

மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை இரப்பர் வைத்து அழிப்பது போல அழிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர். பழங்கால நினைவுகளை அசைபோட்டு பார்ப் பது சுகம்தான். ஆனால், சிலருக்கு அது சுமையாக அமைந்து விடு கிறது.

கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் திடீர் மறை வு, காதல் ஏமாற்றம், தொழில் நஷ்டம், சொத்துகளை இழத்தல் போன்றவற் றை மறக்க முடியாமல் சிரமப்ப டுகின்றனர். இது தீராத மன அழுத் தத்தையும் ஏற்படுத்துகிறது. இத ற்கு தீர்வு காணும் நோக்கில் கனடா வின் மெக்கில் பல்கலையின் நரம் பியல் நிபுணர் டெரன்ஸ் காடர் தலை மையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் தெரியவந்தது பற்றி அவர் கூறியதாவது; தசை பாதிப்பு, விபத்து போன்றவற்றால் சிலர் கையை இழக்கின் றனர். ஆனால் கையை இழந்த பிறகு கூட சில வேளைகளில் அவர்கள் கை வலி ப்பதாக உணர்கின்றனர். கை இருந்த போது ஏற்பட்ட வலி யின் தாக்கம் இது கடந்துபோ ன தகவலை மூளை அசை போடுவதால் தான், இல்லாத கைகூட அவர்களுக்கு வலிக் கிறது.

இது மட்டுமின்றி, கடந்த கால சம்பவங்கள் சிலருக்கு நிரந்த ர சோகத்தை ஏற்படுத்தி விடு கின்றன. இதுவும் முந்தைய ரகத்தை சேர்ந்ததுதான். புதிதாக ஒரு வலி ஏற்படும்போதோ, சோக நினைவு களில் மூழ்கும்போதோ மத் திய நரம்பு மண்டலத்தில் பிகேஎம் kட்டா என்ற புரோட்டீன் என் சைம் அளவு அதிகரிக்கிறது.

இதனால் நியூரான்கள் இடையே தக வல்கள் சிறப்பாக பரிமாறப்படுகின் றன. எப்போதோ வலி, சோகம் ஏற்ப ட்டது பற்றிய தகவல் களை மூளை அலசுகிறது. புதிய வலி, சோகத்து டன் பழைய சோகமும் சேர்ந்துகொள் கிறது. நரம்பு மண்டலத்தில் இந்த என்சைம் அளவை குறைத்தால், என் சைமை இரப்பர் வைத்து அழிப்பது போல அழித்தால் பழைய சோகங்கள், வலிகள் தாக்காது. நீண்ட கால சோகம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இது நல்ல மருத்துவ முறையாக பயன்படும். இவ்வாறு காடர் கூறினார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: