Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆஞ்சநேயனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய “அனன்யா”

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கும், கேரள தொழில் அதி பர் ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சய தார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவி ல் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார் த்திருந்தனர் பட உலகினர்.

இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளி யானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் இதுபற்றி ஆஞ்சநேயனிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனை வியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருப் பதாக தெரிவித்தார். ஆஞ்சநேயனிடம் விசாரனை நடந்து கொண் டிருந்த நிலையில், ”ஆஞ்சநேயனை தான் மணப்பேன் என்றும், நிச் சயதித்தப்படி எங்களுடைய திருமணம் நடக்கும்” என்று அனன்யா அறிவித்தார்.

ஆனால் தற்போது அனன்யாவிடம் மன மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. திருமணத்தை அவர் நிறுத்தி விட்டதாகவும், மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள தாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அவ ர் கூறும்போது, ”திருமணம் பற்றி இன் னும் முடிவு செய்யவில்லை. அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களு டன் நடிக்க ஆசைப்படுகிறேன். சினிமா வில் சாதிக்க வேண்டியது நிறைய இரு க்கிறது” என்று கூறியுள்ளார். அனன்யா இப்படி திடீர் பல்டி அடித்து இருப்பதால், ஆஞ்சநேயனை அதிர்ச்சி குள்ளாக்கியு ள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply