Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இத, கேக்கறதுக்கு ஒரு நாதியில்லையே! நம் நாட்டில் !!!!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30லி ருந்து 40ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கி றது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!
 
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்துசேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாக னங்களும் வந்து சேர்வதில்லை..!!
 
5.ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொ டுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக் குச் செ லவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைக ளில் விற்கப்படுகி ன்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்க ளும் நடைபாதை கடைகளில் விற் கப்படுகின்றன..!!
 
7.குடிக்கும் Lemon Juice, Orange juice…etc இவையெல்லாம் செய ற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத் திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
 
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டி ய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியா பாரம் நடத்திக் கொ ண்டிருக்கிறார்கள்.
 
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமைமாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை…அதே மாவை பிஸ்கட், கேக், பிரெ ட் டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
 
10.பிரபலமாகவேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்குரிய உண்மையான வழியில் செல் ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத்தொழிலாளர்களை ஒழிக்கவேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக் குடிப்போ ம்…!!!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: