Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! ‘முப்பொழுது ம் உன் கற்பனைகள்’, காதலில் சொதப்புவது எப்படி’னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு….

அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே?

என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. ‘கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் போன் பண்றேன்’னு நம்பர் வாங்கி வை ச்சிருக்கேன்.

இப்ப நிறைய திட்டமிடலோடு இருக்கேன். ஒவ்வொரு அடியையும் கவனமா எடுத்து வைக்கிறேன். எது சரியோ அதை மட்டுமே செய்யுறேன். ஆலோசனைக்குக்கூட யா ரையும் வைச்சுக்கலை. ஏன்னா, எல்லா த்தையும் தெரிஞ்சுக்குற பக்குவத்தை என் குடும்பம் எனக்கு கொடுத்திருக்கு. அதை நான் சுதந்திரமா உணர்றேன்.

தமிழ் சினிமா மேலே எனக்கு மரியாதை அதிகம். ரசிகர்களுக்கு என்னைக்கும் கட மைப்பட்டிருக்கேன். ஒண்ணுமே தெரிய மா அப்பாவியா வந்த என்னை, என் நடிப் பை மட்டும் வைத்து ஏத்துக்கிட்டாங்க. எல்லோருக்கும் நன்றி. நன்றியைவிட பெரிய வார்த்தை தமிழில் இருக்குதா என்னா?

எந்த தியேட்டரில் பார்த்தாலும் நீங்கதான் டூயட் பாடுறீங்க? டாப்ஸி, ஹன்சிகா, தமன்னா எல்லோரும் உங்க மேலே கோபமாக இருக்கா ங்களாமே?

இதையெல்லாம் யாருசெ ல்றா. நீங்க சொல்ற எல் லோருமே எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு நா ளைக்கு முன்புகூட தமன் னா பேசினாங்க .  ‘முப்பொ ழுதும் உன் கற்பனைகள்’ போஸ்டர் நல்லா யிருந்து ச்சுன்னு வாழ்த்து சொன் னாங்க. டாப்ஸி எப்போதாவது பேசு வாங்க. ஹன்சிகாவை சந்தித் தது இல்லை. என்லெவலுக்கு ஏத்த இடத்தை தக்கவைக்க ணும்ன் னு நினைக்கிறேன்.

அதுக்கான கதை தேர்வு, டைரக்டர்கள்ன்னு யோசனை போய்க்கிட் டு இருக்கு. இரண்டே மாசத்துல மூணு படம். நினைச்சுப் பார் தாலே மகிழ்ச்சியா இருக்கு. நிறைய பேர் இந்த இடத்துக்குப் போராடிக் கிட்டு இருக்காங்க.

அவங்களுக்கு முன்னாடி இந்த இடத்து க்கு வந்த எனக்கு வாழ்த்து சொல்லுங்க. சத்யம் தியேட்டரில் ‘வேட்டை’, ‘முப்பொ ழுதும் உன் கற்பனைகள்’, ‘காதலில் சொத ப்புவது எப்படி?’ன்னு மூணு படமும் ஓடு தாம். எவ்வளவு பெரிய இடம். தேங்க் காட்.

விதார்த், ஆர்யா, சித்தார்த், அதர்வான்னு சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ வித்தியா சம் இல்லாமல் நடிக்கிறீங்களே?

‘சிந்து சமவெளி’ படம் நல்ல ஓபனிங் கொ டுத்தும், நான் அதே மாதிரியான கதைகளி ல் நடிக்கலை. நடிச்சிருந்தா எனக்கான இந்த இடம் கிடைச்சிருக்கு மான்னு தெரியலை. ரொம்ப நிதானத்தை கடைப் பிடிச்சேன்.

‘மைனா’ நல்ல திட்டமிடுதலோடு நடிச்ச படம். ஆனாலும் ‘சிந்து சம வெளி’ படம் ‘மைனா’வை முந்தி ரிலீஸ் ஆகிவிட்டது. அந்த சமயத்தி ல் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனாலும் எந்த தப்பான இடமும் எனக்கு கிடைக்கலை.

‘சிந்து சமவெளி’, தமிழ் வசனங்களின் அர்த் தம் புரியாமல் நடிச்சுக் கொடுத்த படம். அந்த விஷயங்களை மறக்க நினைக்கிறேன் இப் பல்லாம். என்ன கதை, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் உண்டான்னு தான் பார்க்கு றேன். அதுதான் இந்தமாதிரி வித்தியாசத்தை உங்களு க்குக் காட்டுது.

அமலா பால் மட்டும்தான் இது மாதிரி வெ ரைட்டியா ரோல் பண்றா ன்னு மத்தவங்க சொல்றதைப் பெருமையா நினைக்கிறேன். நல்லா அறிமுகமான ஹீரோவுடன் ஒரு பட ம். அடுத்து என் கேரக்டருக்கான ஒரு படம். திரும்பியும் ஒரு ஹீரோவுடன் படம் பண்ணு ம் போதுதான் என் கிராஃபை சரியா வெச்சி க்க முடியும். பெரிய ஹீரோக்களின் படங்க ளில் மட்டும்தான் நடிப்பேன்னு அடம் பிடிச்சுக்கிட்டு இருக்கக் கூடா து. இருக்கவும் மாட்டேன்.

சில சமயம் ஒல்லியாத் தெரியுறீங்க. திடீர்ன்னு வெயிட் போட்டுடு றீங்க. என்ன பிளான்?

எனக்கு கேரக்டர் முக்கியம். அதுக்காக நானும் ஹீரோக்கள் மாதிரி எந்த ரிஸ்க்கும் எடுக்க ரெடியா இருக்கே ன். ‘வேட்டை’ படத்துல கிராமத்துப் பொ ண்ணு கேரக்டர். ரொம்ப துறு துறுன்னு இருக்கணும் ன்னு அதுக்கு சரியா உடம் பை வெச்சிருந்தேன். ‘வேட்டை’ சமயத்தி ல்தான் ‘முப்பொழுதும் உன் கற்பனைக ள்’ படமும் ஷூட்டிங் நடந்துக்கிட்டு இரு ந்துச்சு. அதுக்குக் கொஞ்சம் மெச்சூர்டா ன அமலா தேவைப்பட்டாள்.

அதுக்கும் நிறைய பயிற்சி எடுத்து வித்தி யாசம் காட்டினேன். ‘காதலில் சொதப்புவ து எப்படி?’ அப்படியே நேர் எதிர். கல்லூரி மாணவி. அதுக்கும் சில பயிற்சிகள், டய ட்ன்னு சிரமப்பட்டேன். அப்போது கொஞ் சம் குண்டாகவும் இருந்தேன். அப்பறம் வெயிட்டை குறைக்க சொன் னாங்க. மூணு மாசம் டைம் கேட்டு வெயிட்ட குறைச்சேன்.

‘மைனா’வில் இருந்த அமலா பால் இப்போ இல்லை, கிளாமரிலும் முகம் காட்டத் தொடங்கிவி ட்டீர்களே? நீங்க சொல்றது உண்மை தான். ‘மைனா’ அம லா பால் இப்போ இல்லை. வெற்றி பெற சில சம ரசங்கள் தேவைப்படுது. கதைக்காக, கேரக்டருக்காக, சினிமாவின் வியாபாரத்துக்காக கிளாமர் வேடத்துக்கு முக்கியத்துவம் வந்து விடுகிறது. சமீபத்தில் நான் கவனிச்ச விஷயம். நான் கிளாமர் பண்ணினா ரசிகர்களுக்கு பிடிக்குது.

ரசிகர்களுக்குப் பிடிக்கிறதைச் செய்வதுதானே என் வேலை?

அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால்ன்னு எல்லோரும் கிளாமர் ரோலுக்கு தயக்கம் காட்டாமல் இருப்பது தான், உங்கள் கிளாமருக் கும் காரணமா?

எல்லோருக்கும் ஒரு இடம் தேவைப்படுது. ‘வானம்’, ‘அருந்ததி’ ஆகிய படங்களில் வந்த அனுஷ்காவை எல்லோருக்கும் பிடி க்கும். ஆனால் அவங்க அதே மாதிரியான படங்களில் மட்டுமே நடிக்கலை. அனுஷ் கா அதே மாதிரிதான் வரணும்ன்னு யாரும் கேட்கலை.

‘சிங்கம்’ மாதிரியான படங்களில் வரும் அனுஷ்காவையும் ரசிகர்களுக்கு பிடிக்கு து. ‘மகாதீரா’ மட்டும் காஜல் அகர்வாலின் கேரியரில் முக்கியமான படம் அல்ல. கிளாமர் இல்லாமல் வந்த ‘நான் மகான் அல்ல’ படமும்தான். ‘விண் ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் வந்த த்ரிஷாவை யாராவது எதிர்பார்த்தார்களா? ஆனா எப்படி ரசிச்சாங்க? கிளாமரா இல்லை யாங்கறது முக்கியமில்லை. ரசிகர்களுக்குப் பிடித்தபடி நடிக்கிறது தான் முக்கியம்.

அரியர்ஸ் தேர்வில் பாஸான தற்கே அனுஷ்காவை அழை த்து பார்ட்டி கொடுத்தீர்களா மே?

இதெல்லாம் எப்படி உங்களு க்குத் தெரியுது? அது தானாக வே அமைந்தது. அனுஷ்கா என் சகோதரி மாதிரி. அவங் ககிட்ட நிறைய பேச ஆரம்பி ச்சிருக்கேன். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் கிடைத்த அறிமுகம், இப்ப நல்ல நட்பை உண்டாக்கியிருக்கு. மனம்விட்டு பேசும் ஒரு சகோத ரியா, எல்லாவற்றையும் பகிர்ந்துக்கும் தோழியா அனுஷ்கா இருக் காங்க. அவங்களுக்கு பார்ட்டி கொடுப்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. விடுங்க

ஒரு காதல் கதை இல்லை ன்னா, இந்த பேட்டி முழுமை பெறாதுன்னு உங்களுக்கே தெரியுமே?

காதலிக்க ஆசை இருக்கு. ஆனா இன்னும் சந்தர்ப்பம் அமையலை. இப்போதைக்கு எந்தக் கதையும் இல்லை. ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரு பையன் காதல் கடிதம் கொடுத்ததோடு சரி. அதன் பின் யாரும் இன்னும் காதலைச் சொல்லலை. யாராவது சொன்னா உங்ககிட்ட சொல்றேன். போதுமா.. இப்ப கிளம்புங்க.

– புதிய உலகத்தில் கண்டெடுத்த‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: