Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனது குட்டிக் கால்கள் கொண்டு “தில்லானா” ஆடிய “நேத்ரா”!

கலைமகளின் ஆசிபெற்ற கலைமகன் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல் லூரியின் கலை சேவைப் பிரிவான வி.டி.எஸ்., ஆர்ட்ஸ் அகடமியி ல், ஆண்டு முழுவதும் சிரபுஞ்சியைப் போல், இளைய கலைஞர்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் அளிக்க வாய்ப்புத் தரு வது, மிகச் சிறப்பான ஒன்று.

பொதுவாக இசை விழா சமயத்தில் பல சபாக்கள், இளம் கலைஞர்களுக்கு வாய் ப்புகள் கொடுத்தாலும், “டிராப்’ எனப்படும் இவ் வமை ப்பு வாராவாரம், வார இறுதி நாட்களில் குரலிசை, கருவி இசை, நடனம் இம்மூன்றுக்கும் சரியான விகிதத்தில், இளம் கலைஞர்க ளுக்கு நிகழ்ச்சிகளை நடத்த இடம், ஒலி, ஒளி அமைப்புகள், சான் றிதழ் அரங்கம் என, அனைத்தும் இலவசமாய் கொடுப்பது மிகப் பெரிய விஷயம்.

இதில், சூர்யா சந்தானத்தின் சிஷ்யை குட்டி பரத கலைஞரான, நேத் ரா லெனினின் நிகழ்ச்சி நடைபெற்றது. நேத்ரா லெனின் சங்கரா வித்யாஸ்ரமத்தில் ஐந்தாவது படிக்கிறார். பல சபாக்கள், நாட்டியா ஞ்சலி, கோவில்கள் என, பல இடங்களில் நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறார்.

அன்றைய தன் நிகழ்ச்சியில், நாட்டை ராகத்தில் அமைந்த புஷ்பா ஞ்சலியுடன் ஆரம்பித்து, கணபதி கவுத்துவத்தை கொடுத்தார். அடு த்து, கே.என்.டி.,யின் ஹம்சா நந்திராக ஜதிச்வரம், ரூபக தாளத் தில் அமைந்ததை ஆடி சிறப்பித்தார். பிரதான உருப்படியாக, கே.என்.தண்டாயுதபாணியின் காம்போதி ராக ஆதி தாள வர்ணம்.

இதன் முழு பகுதியுமே, கண்ணனை போற்றும் படியாக உள்ளது. அதில், பல்லவியில் சஞ்சாரிக்கும் கிருஷ்ணனின் பால்ய லீலைக ளான, உறியிலிருந்து வெண்ணெய் திருடுதல், தயிர் பானை உடை த்தல், கோபியர்கள் தண்ணீர் பானையை கல் எறிந்து உடைத்தல் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க கொடுத்து, கைத்தட்டு பெற்றார்.

அனு பல்லவியில், வரிகளுக்கு கீதாபோதேசம் திரவுபதி, வஸ்த் ராபரண காட்சிகளையும், சரணம் மற்றும் சரண வரிகளுக்கு, ” மதோ சோதனை செய்வாயடி…’ என்ற வரிகளில் துவங்கி, சிட்டை ஸ்வர பகுதியில் மிக வித்தியாசமாக விஷ்ணுவும், ஈசனும் இணைந்து, அய்யப்பனாக அவதாரம் செய்த காட்சிகளை வைத்து, அய்யப்பனாக நின்று, நமக்கு தரிசனம் கொடுத்தார். இதைத் தொட ர்ந்து, ஸ்ரீசக்ரராமசிம்மாளேச்வரி, குறையொன்றும் இல்லை பாடல் களுக்கு நடனத்தை கொடுத்தார். கே.என்.டி.,யின் மிகச் சிறப்பான பாடலான, பார்த்துக் கொண்டே இருந்தால் போதுமா? இதில், சிவன் , பார்வதி இணைந்து நடனமாட நாரதர் தும்புரு இசைக்க, நந்தி மத் தளம் போட, நாராயணனும், அயனும் தாளங்கள் போட, ஜதிகளுட ன் ஆடுவதை தனது குட்டிக் கால்கள் கொண்டு நேத்ரா ஆடினார்.

நடன நிகழ்ச்சியின் இறுதியில், குரு சூர்யா மிக வித்தியாசமான தில்லானாவை நேத்ராவுக்காக அமைத்திருந்தார். கே.என்.டி.,யின் தில்லானா தீம்தீம்ததிரளா என மிக அமைப்பாகவும், விறுவிறுப் பாகவும் உள்ள தில்லானாவில்,, சரண வரிகளே இல்லாமல் அமை த்திருப்பது சிறப்பு. ஜதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாத வேலைப்பாடுகளை வெளிக்கொணரும் விதம் அமைக்கப்பட்ட பாடலுக்கு மிகச் சிறப்பாக ஆடி, ரசிகர்களின் கைத்தட்டல்களையு ம், வி.டி.எஸ்.,சின் ஸ்காலர்ஷிப்பையும் பெற்றார்.

-ரசிகப்ரியா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: