Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடி யாக தொடங்கப்பட்டன.  
 
இதற்கும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை க்கு எதிரான போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7பெண்கள் உள்பட 15 பேர் கடந்த 19-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.  
 
அவர்களது போராட்டம் இன்று 9-வது நாளை எட்டியுள்ளது. உண் ணாவிரதம் இருந்தவர்களில் 2 பெண்களின் உடல்நிலை மிக வும் மோசமடைந்ததை தொட ர்ந்து மருத்துவமனையில் அ னுமதிக்கப் பட்டுள்ளனர். உதய குமார் உள்ளிட்டோர் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுத்ததாலும், அவர் களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்த நிலையிலேயே இருந்ததாலும் இடிந்த கரை பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையே நிலவியது.  
 
இந்தநிலையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தா ல், தாங்களும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று உதயகுமார் அறிவித்ததால் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த் தை நடத்த அரசு முன்வந்தது.  
 
அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் உதயகுமாரை இன்று காலை போனில் தொடர்பு கொண்டு பேசி, பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் தயாராக இருப்பதாக கூறினார். அதற்கு உதய குமாரும் சம்மதித்தார்.
 
அதன்படி, ராதாபுரம் தாலுகா வுக்குட்பட்ட பரமேஸ்வர புரம் பஞ்சா யத்து அலுவல த்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்ட து. அதன்படி பரமே ஸ்வரபுரம் பஞ்சாயத் து அலுவலகத்தில் வைத்து இன்று மதி யம் ஒரு மணியள வில் பேச்சுவார்த்தை நடந்தது.  
 
இதில் தமிழக அரசின் தரப்பில் கலெக்டர் செல்வராஜ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜூ, எஸ்.பி. விஜயேந்திரபிதாரி ஆகியோர் கலந்துகொண்டனர். போராட்டக்குழுவினர் தரப்பில் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக எந்த ஒரு வழக் கும் இல்லாதவர்களாகவும், ஒரு கிராமத்திற்கு ஒருவர் என்ற நிபந்தனையின்படியும் தேர்வு செய்யப்பட்ட அரிமாவளவன், ஜெய சீலன், சுந்தரி, சாந்தி உள்ளிட்ட 15 பேர் கலந்துகொண்டார்கள். இந்த குழுவில் மதுரை மறைமாவட்ட ஆயர் பீட்டர் பெர்னாண் டோவும் கலந்து கொண் டார். 
 
இந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்காரர்கள் தங்க ளது கோரிக்கைகளை கலெக்டர் உள்ளிட்ட அதி காரிகளிடம் தெரிவித்த னர். அதேபோல் அரசின் நிலை ப்பாட்டை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், போரா ட்டக் குழுவை சேர் ந்தவர்களிடம் கூறினார் கள்.  
 
பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் அரசு தரப்புக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டதாக போராட்டகுழு சார்பாக அரிமாவளவன் கூறியுள்ளார். அவர்கள் சார்பாக வைக்கப்பட்டிருந்த 7 கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என கலெக்டர் உறுதியளித்துள்ளார். மேலும், போரா ட்டத்தை கைவிட அரசு தரப்பில் கேட்டுக்கொண்டதற்கு போரா ட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
ராதாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்படும் என்றும் கூடங்குளம் அணு உலை வட்டாரத்தில் மட்டும் 144 தடை உத்தரவு நீடிக்கும் என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து, உண்ணாவிரதம் மேற்கொள்ளும் உதயகுமார் உட்பட 13 பேரிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொள்வோம் என அரிமாவளவன் கூறியுள்ளார்.
news in malaimalar

Leave a Reply