Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்

டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி தகவல்
 மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாட்டில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2010-ம் ஆண்டு நடந்தது. 1 லட்சத் து 20 ஆயிரம் பேர் இதில் ஈடுபட் டனர். வீடு கணக்கெடுப்பு பட்டிய லை தமிழ்நாட்டு திட்டக்குழு துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் இன்று வெளியிட் டார்.
 
பின்னர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபால கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டில் குடும்பங்களின் எண்ணிக்கை 1.42 கோடியில் இரு ந்து 1.85 கோடியாக அதிகரித்துள்ளது. 94 சதவீத குடும்பங்கள் ஆழ் துளை கிணறுகள், குழாய் இ ணைப்புகள், மூடிய கிணறு ஆகி யவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். தற்போது 93 சதவீத குடும் பங்களில் மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுக ளில் மின் இணைப்பு இல்லை.
 
2001-ம் ஆண்டு 75 சதவீத குடு ம்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது 93 சதவீத மாக அதிகரித்துள்ளது. 64 சதவீத குடும்ப ங்களில் வீட்டுக்குள் குளி க்கும் வசதி உள்ளது. 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப் பிட ங்களையே பயன்படுத்துகிறார்கள். 2001-ம் ஆண்டு கணக்கெடு ப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடு களில் டி.வி. இருந்தது. தற்போது 87 சதவீதமாக அதிகரித்துள்ள து. இந்தியாவில் டெல்லியில் 92 சதவீ தம் பேர் டி.வி. பயன்படுத்து கிறார்கள்.
 
தமிழ்நாடு டி.வி. பயன்படுத்துவோர் எண் ணிக்கையில் 2-வது இடம் பிடித்துள்ளது. 11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகி றார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்க ளையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகன ங்களையும் பயன்படுத்துகிறார்கள். 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத் துகிறார்கள். 26 சதவீதம் பேர் கூரை வீடு களில் இருந்தனர். தற்போது அது 15 சதவீ தமாக குறைந்துள்ளது. முன்பு 33 சதவீத வீடுகள் மண் சுவர்களால் கட்ட ப்பட்டிருந்தன. அது 25 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: