Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேலி கூத்தான பல்கலை பட்டமளிப்பு விழா

மதுரை காமராஜர் பல்கலை 45வது பட்டமளிப்பு விழா, துணை வேந்தர் இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும் நேற்று நடந்தது. மாணவர்களின் கையில் பட்டங்களை முதலிலேயே கொடுத்துவிட்டு, கவர்னரிடம் வாங்குவது போன்று, “போட்டோவுக்கு போஸ்’ கொடுக்கும் நிகழ்வாகவே அமைந்திருந்தது. பட்டம் பெற வந்தவர்கள், காலை 10 மணிக்குள் விழா நடக்கும் அரங்கில், அமர வைக்கப்பட்டனர். வழக் கமாக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மேடைக்கு அழைக்கப் பட்டு, தலைமை வகிப்ப வரால் பட்டங்கள் வழங்கப்படும். ஆனால், நேற்று நடந்த விழா வில் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மாணவர் களின் கையில் பட்டங்களை கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தினர். பின் கவர்னர் வந்ததும், மாணவர் பெயர்கள் அழைக்கப்பட்டது. அப்போது பட்டத்துடன் மேடைக்கு வந்து, கவர்னரிடம் காட்டினர். போட்டோ எடுப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த பட்டங்களை, கவர்னர் தொட்டுக் காண்பித்தார். இதனால், பட்டமளிப்பு விழாவி ன் மரபு மீறப்பட்டு, கேலிக் கூத்தாகி விட்டதாக பேராசிரி யர்கள் தெரிவித்தனர். அதிக “டாக்டர் பட்டங்கள்’: இந்த பட்ட மளிப்பு விழாவில் முதன் முறையாக அதிகபட்சமாக, 419 மாணவ மாணவியர் டாக்டர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற் ற அனைவருக்கும் முன் கூட் டியே எண்கள் குறிப்பிட்ட டோக் கன் வழங்கப்பட்டிருந்தன. பார்வையற்ற மாணவர் சரவணபாண்டி க்கு பட்டத்தை வழங்கிய பின் அவரை கவர்னர் பாராட்டினார். பல் கலை “ரேங்க்’ பெற்ற, 72 பேரில், 44 பேர் மாணவியர். பதக்கப் பட்டியலில் மாணவியரே முதலிடம் பெற்றனர்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: